மெரினா டூ சின்னத்திரை.. சீரியலில் களமிறங்கும் ஜூலி! ரசிகர்கள் வாழ்த்து!
பிக்பாஸ் புகழ் ஜூலி சீரியலில் நடிக்கிறார். அவரது காட்சிகள் அடங்கிய சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் புகழ் ஜூலி சீரியலில் நடிக்கிறார். அவரது காட்சிகள் அடங்கிய சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் வெளியாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் ஜூலி நடித்திருக்கிறார். அதன் புரோமோ தான் இப்போது வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டில் தொடங்கிய ஏறுமுகம்:
தமிழகத்தில் நடந்த பெரும் போராட்டங்களில் ஒன்று ஜல்லிக்கட்டு போராட்டம். அந்தப் போராட்டத்தில் இளம் பெண்ணாக துணிச்சலாக குரல் எழுப்பிய ஜூலி ஊடக கவனம் பெற்றார். ஆரம்பத்தில் வீரத்தமிழச்சி என்று அறியப்பட்டார். ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்ததால் அவரை சமூக ஆர்வலர் என்றும் புகழ்ந்தனர்.
அப்போதுதான், விஜய் தொலைக்காட்சியில் ஏகபோக எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நடிகர்கள் ஸ்ரீ, வையாபுரி, பரணி, கஞ்சா கருப்பு, ஆரவ், கணேஷ் வெங்கட்ராமன், சக்தி, சினேகன், மற்றும் நடிகைகள் நமீதா, ரைசா வில்சன், ஓவியா, காயத்ரி ரகுராம், அனுயா, ஓவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களோடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்ற ஜூலியும் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் ஜூலியின் அட்ராசிட்டீஸ் அம்பலமானது. ஓ இதுதான் அவர் உண்மை முகமா என எல்லோரும் கண்டு கொண்டனர். நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், சக்தி, ஜூலி அதிகம் ட்ரோல் செய்யப்பட்டவர்கள் ஆயினர்.
வீரத்தமிழச்சி, சமூக ஆர்வலர் ஜூலியை நெட்டிசன்கள் சந்தி சிரிக்க வைத்தனர். சில காலத்தில் ஜூலி மீம்ஸ் க்ரியேட்டர்களின் ஃபேவரைட் கன்டென்ட் ஆனார்.
பிக்பாஸ் ஜூலி சினிமாவிலும் தலை காட்டினார். ஆனால் அதுவும் ட்ரோல் ஆனதுதான் மிச்சம். இருந்தாலும் ஊடக வெளிச்சத்துக்காக ஏதாவது செய்வது அவரது வாடிக்கையாகிவிட்டது. அவரது க்ளாமர் ஃபோட்டோக்களுக்கு வரும் பின்னூட்டங்கள் அய்யய்யோ ரகம் தான்
போராட்டம், பிக்பாஸ், சினிமா, பிக்பாஸ் அல்டிமேட் என வலம் வந்தவர் இப்போது சீரியலில் காலடி எடுத்து வைக்கிறார். சின்னத்திரை சீரியல் அவரை எப்படி வரவேற்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.
இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர். அந்த வரிசையில் தான் தவமாய் தவமிருந்து லேட்டஸ்ட் ஆட் ஆனாக இணைந்துள்ளது.
ஜூலியும் புது என்ட்ரி கொடுப்பதால் சீரியலுக்கான வரவேற்பு டாப் கியரில் எகிறும் என்று தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது. ஆனால், இந்த புரோமோவை கூட விடாமல் ஜூலியை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.