BiggBoss Janani in Thalapathy 67 : ஆரம்பமே அட்டகாசம்... லாஸ்லியாவை மிஞ்சிய ஜனனி... தளபதி 67 படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்
பிக் பாஸ் சீசன் 6 பிரபலம் ஜனனி லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி சேரும் தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்ற ஸ்டேட்மென்ட் தற்போது உண்மையாகி வருகிறது. பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற சிங்களத்து பெண் ஜனனிக்கு திரைப்படத்தில் அதுவும் ஸ்டார் ஹீரோவின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ்லியாவின் வழியில் ஜனனி :
ஏற்கனவே செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருபவர் லாஸ்லியா மரியநேசன். இவரும் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவிற்கு நடிகர் விஜய் என்றால் அத்தனை இஷ்டமாம் ஆனால் அவருடன் நடிக்கும் வாய்ப்பை தட்டி சென்று விட்டார் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனனி. விஜய் டிவி பிரபலம் அமுதவாணனின் செல்லமான ஜனனி தான் நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram
டாப் கியரில் செல்லும் ஜனனி :
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சீரியல் வாய்ப்பு அல்லது படத்தில் நடிக்க வாய்ப்புகள் தேடி வருகின்றன. கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் - பாவனி மற்றும் சிபி மூவரும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து என்ட்ரியே டாப் கியரில் தளபதி விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஜனனிக்கு கிடைத்ததற்கு பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
கூடுதல் தகவல் :
சினிமா வட்டாரங்கள் கூறும் இந்த தகவல் குறித்து ஜனனியிடம் கேட்டதற்கு "நான் இதை பற்றி இப்போது பேச முடியாது. படக்குழுவினர்கள் தான் இது குறித்து வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் தகவலாக வாரிசு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முன்னாள் காதலரும் கன்னட நடிகருமான ரக்ஷித் ஷெட்டியும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனும் தகவலும் பகிரப்பட்டு வருகிறது.