Bigg Boss | பாவனிக்கு இதனாலதான் முத்தம் கொடுத்தேன்.. மனம் திறந்த பிக்பாஸ் அமீர்
பிக்பாஸ் சீசன் 5, வீட்டினுள் நடந்த அத்தனை களேபரங்களுக்கும் இடையே இனிதே முடிந்துள்ளது. இந்த சீசனில் ராஜூ டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ரன்னர் அப்பாக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 5, வீட்டினுள் நடந்த அத்தனை களேபரங்களுக்கும் இடையே இனிதே முடிந்துள்ளது. இந்த சீசனில் ராஜூ டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ரன்னர் அப்பாக பிரியங்கா தேர்வு செய்யப்பட்டார்.
இப்போது, பிக்பாஸ் ஃபீவர் முடிந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள பிக்பாஸ் ஓடிடி பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவர்களின் பேட்டி ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், பாவனிக்கு முத்தம் கொடுத்த அமீர் பேட்டி வெளியாகி சூட்டைக் கிளப்பிக் கொண்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அழகுப் பதுமையாக உலா வந்தவர் பாவனி ரெட்டி. ஃபைனலில் கோப்பை பாவனிக்கு என்றுதான் பேசப்பட்டது. இந்நிலையில் பாவனி ரெட்டிக்கு ஒரு முறை அமீர் முத்தம் கொடுத்தார். அது பரபரப்பானது. அந்த முத்தம் குறித்து தான் அமீர் இப்போது பேட்டி கொடுத்துள்ளார்.
அமீர் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்தவர். அவர் வருவதற்கு முன்னதாகவே பாவனிக்கும் அபிநய்க்கும் ஏதோ இருப்பதாக பிக்பாஸ் வீட்டாரே கிசுகிசுத்துக் கொண்டனர். அப்போது அது சர்ச்சையாக ஒரு டாஸ்க்கின் போது ராஜூ விஷயத்தைப் போட்டு உடைத்தார். பாவனி நீங்கள் அபிநயை காதலிக்கிறீர்களா என்று கேட்டு முடித்தார்.
ஆனால் இருவருமே அதனை திட்டவட்டமாக மறுத்தனர். பாவனியுடன் நட்பாகவே பழகுவதாக வெளிப்படையாக அறிவித்தனர்.
அந்த வேளையில்தான் அமீர் என்ட்ரி அமைந்தது. அமீரும் பாவனியும் அரங்கில் எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே சுற்ற ஆரம்பித்தார்கள். அவர்களின் கெமிஸ்ட்ரி எல்லோரின் கண்களையும் உறுத்தியது. ஒருக்கட்டத்தில் அமீர் வெளிப்படையாக நேரடியாக பாவனியிடம் சென்று, நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறினார். அதற்குப் பாவனி எனக்கு அந்த எண்ணம் இல்லை. நாம் நண்பர்கள் என்று கூறிவிட்டார். இந்நிலையில் ஒருநாள் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுக்க வீட்டில் சலசலப்பும் வெளியில் பரபரப்பும் ஏற்பட்டது.
அந்த முத்த சர்ச்சை இன்று வரை நீள அண்மையில் மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளர் அமீர். அதில் அவர், "நான் பாவனியை காதலித்தேன். அதை அவரிடமே சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இருந்தாலும் எனது காதல் மிகை உணர்வால் நான் அவருக்கு முத்தம் கொடுத்தேன். அதை அவர் நிராகரிக்கவில்லை. இப்போது வெளியில் வந்த பின்னர் இருவரும் நட்புடன் பழகி வருகிறோம். பிக் பாஸ் வீட்டில் எல்லோரும் பாவனியை டார்கெட் செய்வதுபோல் தோன்றியது. அவருக்கு ஆறுதலாக நான் இருந்தேன். ஆறுதலாகவே முத்தம் கொடுத்தேன்" என்று கூறியுள்ளார்.
இந்த நட்பு நீடித்தும் நிலைக்குமா இல்லை நட்பே துணை என்று சுழியிட்டு இருவரும் காதலை அரங்கேற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பாவனி ரெட்டி ஏற்கெனவே திருமணமாகி கணவரை இழந்தவர். கணவரின் மறைவுக்குப் பின்னரும் கூட கணவர் வீட்டார் தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாக அவரே பிக்பாஸ் வீட்டில் கூறினார். அதனால் அவர் அமீரின் காதலை ஏற்பாரா? இரண்டாவது திருமணத்துக்கு தயார் ஆவாரா என்பதையும் காலமே நிர்ணயிக்கும்.