Bigboss Ultimate Elimination : பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் எலிமினேஷன் யார் தெரியுமா..?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகப்போவது யார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. கமலுக்கு பதிலாக சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது எனலாம். தன்னுடைய இரண்டாவது எபிசோடிலே போட்டியாளர்களை கண்டித்து சிம்பு தனது பாணியில் இந்த ஆட்டத்தை ஆரம்பித்தார்.
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் ஆட்டம் மேலும் சூடுபிடிக்க உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலே ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாக்குவது எலிமினேஷன் எனப்படும் வெளியேற்றப்படும் சுற்றுதான். இந்த வாரமும் வழக்கம்போல எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த வார எலிமினேஷன் சுற்றில் சினேகன், ஜூலி, சுருதி மற்றும் பாலாஜி முருகதாஸ் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், பாலாஜி முருகதாசிற்கு அதிகளவிலான ரசிகர்கள் இருப்பதாலும் அவருக்கு ஆதரவாகவே ஆன்லைனில் வாக்களிக்கவும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதாலும் அவர் நிச்சயம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. ஆனால், நிச்சயம் சுருதி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அவர் கடந்த முறை நடைபெற்ற வாக்குப்பதிவில் குறைவான வாக்குகளே பெற்றார்.
இந்த வார எலிமினேஷனில் புதிய டுவிஸ்ட் என்னவென்றால் இந்த வாரம் ஒரு எலிமினேஷன் கிடையாது. இரண்டு பேர் எலிமினேஷன் ஆக உள்ளனர் என்பதாகும். அப்படி பார்க்கும்போது சுருதிக்கு அடுத்தபடியாக இரண்டாவது நபராக பிக்பாஸ் வீட்டை விட்டு கவிஞர் சினேகன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சினேகனும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டின் தொகுப்பாளர் பணியில் இருந்து கமல்ஹாசன் விலகியது, பிக்பாஸ் அல்டிமேட்டை எப்போதும் பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்த வனிதா பாதியிலே வெளியேறியது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓவியா வைல்ட் கார்ட் ரவுண்ட் ஆகியவற்றிற்கு பின்னும் வராதது போன்ற நிகழ்வுகளால் பிக்பாஸ் நிகழ்ச்சியே டல்லடிக்கத் தொடங்கியது. இத்தனைக்கும் சேர்த்து எனர்ஜி டானிக் அளிக்கும் விதமாகவே மாநாடு படம் மூலமாக கம்பேக் கொடுத்த சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார்.
தனது நிகழ்ச்சித் தொகுப்பு மூலமாகவும், இந்த வார எலிமினேஷன் மூலலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை மீண்டும் விறுவிறுப்பாக சிம்பு நகர்த்தி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்