Vadakkan Title Change: டைட்டிலை அனுமதிக்க மறுத்த சென்ஸார் வாரியம்: வடக்கன் படத்தின் தலைப்பு மாற்றம்
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் வெளியாக இருந்த வடக்கன் படத்தின் டைட்டில் மாற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
வடக்கன்
சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தின் கதைக்கு சொந்தக்காரர் பாஸ்கர் சக்தி. அடிப்படையில் எழுத்தாளரான இவர் பரத் எம் மகன் படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. இவர் அழகர் சாமியின் குதிரை படத்துக்கு கதை எழுதியிருந்தார். தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் படம் வடக்கன்.
Happy to release the teaser of #Vadakkan
— Lingusamy (@dirlingusamy) April 24, 2024
best wishes to @vediyappan77 @bhaskarwriter & the entire team of @masterpieceoffl & @GRVenkatesh14 for the release https://t.co/AsvgTP7VLd pic.twitter.com/k9Ds5aiiRa
டிஸ்கவரி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமாலா, ரமேஷ் வைத்யா, பிண்டு, வந்தனா என பலரும் நடித்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இந்த படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வடக்கன் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
வடக்கன் படத்தின் தலைப்பு மாற்றம்
இந்த டீசரில் ஹீரோ வடமாநில தொழிலாளியிடம் அடிவாங்கி வந்தது போலவும், அவரால் தன்னுடைய வேலை பாதிக்கப்படுவதை உணர்வதாகவும் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும்,“எங்க பார்த்தாலும் வடக்கன்கள் வேலைக்கு வந்துடுறாங்க.. எல்லா வடக்கன்களையும் அடிச்சி பத்தணும்.. ஒருத்தன் கூட நம்மூர்ல இருக்கக்கூடாது...வெளியூர்ல இருந்து பிழைக்க வந்தவன் இங்குள்ள வடையை சாப்பிட மாட்டானா, அவனுக்காக பானிபூரி, பேல்பூரின்னு போட்டுட்டு இருப்பியா” என வசனங்களும் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் படத்தின் டீசரை பார்த்து இது தான் கதை என்று மதிப்பிட வேண்டாம் என்று படத்தின் இயக்குநர் பாஸ்கர் சக்தி தெரிவித்திருந்தார். மேலும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைதான் தான் படமாக எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இப்படியான நிலையில் வடக்கன் படத்தின் டைட்டில் மாற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கன் என்கிற டைட்டிலை செஸார் வாரியம் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும் இதனால் படத்தின் ரிலீஸ் தாமதாகியுள்ளதாகவும் படத்தின் புதிய டைட்டில் விரைவில் அறிவிக்கப் படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.