Bharathiraja About Dhanush : தனுஷ் கடவுளின் குழந்தை... அவன் என கூறுவது மரியாதைதான்... வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் பாரதிராஜா நெகிழ்ச்சி
வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் இயக்குனர் பாரதிராஜா நடிகர் தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான பதிவு
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம் வாத்தி. நடிகர் தனுஷ் முதல்முறையாக ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தமிழில் இப்படம் 'வாத்தி' என்ற தலைப்பிலும் தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் வெளியாக உள்ளது. இதில் தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
வெளியானது புல் ஆல்பம்:
இந்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் 'வாத்தி' திரைப்படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்குமே வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 'வா வாத்தி' பாடலும் 'நாடோடி மன்னன்' பாடலும் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றதை அடுத்து மற்ற மூன்று பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
#VaathiAudioLaunch ⭐#Bharathiraja : " Dhanush You Will Not Miss What You Do🔥He Rolled & Kept The World in His Hands🌍Dhanush is The Real Artiay✌🏾He Invited Me For The Audio Launch Not For My Experience, That's The Love On Me♥️ " #Dhanush | #GVPrakash | #VenkyAtluri
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 4, 2023
பாரதிராஜா மேடையில் நெகிழ்ச்சி :
மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் ஏராளமான ரசிகர்கள் திரண்டுள்ளனர். இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரான இயக்குனர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் அவர் பேசுகையில் "தனுஷ் நீ வச்ச குறி தப்பாது. உலகத்தையே சுருட்டி கையில வச்சுருக்க. நீ கடவுளுடைய குழந்தை. நம்ம பய எவனாச்சும் ஹாலிவுட் போயிருக்கனா... 'DHANUSH IS THE MAN '. தனுஷை ஒரு ஆர்டிஸ்டாக பார்க்கிறோம். அவன் மனிதன். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது என்னுடைய அனுபவத்திற்காக அல்ல. என் மேல் வைத்த பாசத்திற்காக! " என மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
#VaathiAudioLaunch ⭐#BharathiRaja : " I only did half of what Dhanush told me in #Thirchirtambalam ♥️ & So Mauch Love For that Film😃 Dhanush is like my Son🥺 " #Dhanush | #GVPrakash | #VenkyAtluri
— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 4, 2023
மேலும் அவர் கூறுகையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் சொல்லிக் கொடுத்ததை பாதிதான் நான் செய்தேன், அதற்கே இவ்வளவு லவ்! தனுஷை அவன் என்று கூறுவது மரியாதைதான். அவன் என் மகன் மாதிரி' என கூறினார் இயக்குநர் பாரதிராஜா.
திருச்சிற்றம்பலம் படத்தில் தாத்தா - பேரன் :
நடிகர் பாரதிராஜா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்து இருந்தனர். கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற இப்படத்தில் நடிகர் தனுஷ் தாத்தாவாக நடித்திருந்தார் இயக்குனர் பாரதிராஜா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.