Bharathi Kannamma: கொலைகாரியாக மாறிய கண்ணம்மா...பீஸ்ட் எபிசோடுக்கு இல்லையா ஒரு எண்ட்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மற்ற சீரியல்களை காட்டிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் ஒரு காலத்தில் இருந்தது.
பாரதி கண்ணம்மா சீரியலில் தீவிரவாதியில் ஒருவனை கண்ணம்மா ஆக்ரோஷமாக தாக்கும் வீடியோ ஒன்றி ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மற்ற சீரியல்களை காட்டிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் முதலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினியின் விலகல், ஒரே மாதிரியான காட்சியை மீண்டும் மீண்டும் காட்டியது என இந்த தொடர் பார்வையாளர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது. தற்போது பாரதி கண்ணம்மாவில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் காட்சிகள் போன்று கதை நகர்கிறது.
View this post on Instagram
அதன்படி மருத்துவமனைக்குள் நுழையும் தீவிரவாதிகள் அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் தங்களுக்கு உயிரோட வேண்டும் என தெரிவித்து உள்ளே இருப்பவர்களை பிணைக்கைதிகளாக வைத்து மிரட்டுகின்றனர். பாரதி அவர்களுக்கே தெரியாமல் தண்ணீரில் மயக்க மருந்து கலந்து விட தீவிரவாதிகள் மயக்கமடைகின்றனர். இதனையடுத்து வெளியே சென்று ஒவ்வொரு தீவிரவாதிகளுடனும் பாரதியும், அகிலனும் சண்டையிடுகின்றனர். ஆனால் எதிர்பாராத விதமாக தீவிரவாதி தலைவனிடம் பாரதி மாட்டிக் கொள்கிறார்.
இன்றைய எபிசோடில் மாட்டிக்கொண்ட பாரதியை தீவிரவாதிகள் ஒரு தனி அறையில் கட்டி துன்புறுத்துகின்றனர். மறுபக்கம் தீவிரவாதிகளில் ஒருவன் பிணைக்கைதிகளில் இருக்கும் பெண்களை அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்கிறான். இதில் ஒரு நர்ஸ் கண்ணம்மாவிடம் விஷயத்தை தெரிவிக்க அவர் அதிர்ச்சியடைகிறார். அடுத்த ரவுண்டில் அஞ்சலியை தீவிரவாதி கூப்பிட , அவருக்கு பதிலாக கண்ணம்மா வாண்டட் ஆக வந்து நான் வருகிறேன் என்கிறார்.
பாத்ரூமுக்குள் தீவிரவாதி கண்ணம்மாவை அழைக்க, அவரோ ஸ்டோர் ரூமுக்குள் செல்லலாம் என கூறுகிறார். உள்ளே செல்லும் தீவிரவாதி கண்ணம்மாவின் அழகை வர்ணித்து அவரிடம் அத்துமீறி நடக்க முயற்சிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை எல்லாம் நினைத்து பார்க்கும் கண்ணம்மா அங்கிருந்து கத்திரிக்கோலை எடுத்து தீவிரவாதியை சரமாரியாக குத்துகிறார். இதுகுறித்த ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த பீஸ்ட் பட சீரியலுக்கு எப்ப சார் ஒரு எண்ட் வரும் என காத்திருக்கின்றனர்.