Actor Bharath: மீண்டும் இணையும் வெயில் பட கூட்டணி... போட்டோவுடன் பதிவிட்ட நடிகர் பரத்
கடந்த 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான பரத், தொடர்ந்து செல்லமே படத்தில் வில்லனாக நடித்து அதிர வைத்தார்.
![Actor Bharath: மீண்டும் இணையும் வெயில் பட கூட்டணி... போட்டோவுடன் பதிவிட்ட நடிகர் பரத் Bharath to join hands with Vasanthabalan after 16 years Actor Bharath: மீண்டும் இணையும் வெயில் பட கூட்டணி... போட்டோவுடன் பதிவிட்ட நடிகர் பரத்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/e9eac73be34172ac06143d4c94cdc6c31663418345878224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் பரத் தனது புதிய படத்தின் அறிவிப்பு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான பரத், தொடர்ந்து செல்லமே படத்தில் வில்லனாக நடித்து அதிர வைத்தார். அதன் பின் பாலாஜி சக்திவேலின் 'காதல்' படம் பரத்துக்கு நல்ல முகவரியாக அமைந்தது. தமிழ் சினிமா ரசிகர்களால் கவனிக்கப்பட்ட ஹீரோவாக மாறிய பரத், எம்டன் மகன் படத்தின் மூலம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் பிரபலமானார்.
View this post on Instagram
மேலும் பட்டியல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, பழனி, சேவல், கண்டேன் காதலை, வானம், ஐந்து ஐந்து ஐந்து, ஸ்பைடர் என தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
இதற்கிடையில் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தில் நடித்தார்.பசுபதி, பாவனா, பிரியங்கா உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் அறிமுகமாகியிருந்தார். தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வெயில் பெற்றது. அதன் பின் வசந்தபாலனும் தமிழில் குறிப்பிடத்தகுந்த இயக்குநராக மாறியிருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் வெயில் பட கூட்டணியுடன் இணையவுள்ளதாக நடிகர் பரத் தெரிவித்துள்ளார். வசந்தபாலனுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2006 ஆம் ஆண்டு எப்படி இந்த மேஜிக் கிரியேட்டர் ஒரு காவிய கிளாசிக் "வெயிலை" உருவாக்கினார். இதோ மீண்டும் இந்த மேதை வசந்தபாலனுடன் இணைந்து செயல்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
வசந்த பாலன் கடைசியாக ஜிவி பிரகாஷ்குமார் நடித்த ஜெயில் படத்தை இயக்கிய நிலையில், இந்தியன் 2 படத்தில் சில காட்சிகளை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)