Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" - புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!
சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
Nayanthara: சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.
நயன்தாரா:
தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே, அப்போது முன்னனி நடிகராக இருந்த சரத்குமாருடன் சேர்ந்து நடித்தார். இதனை அடுத்து, ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்தார்.
தொடர்ந்து, சூர்யா, விஜய், அஜித்குமார் என தொடங்கி அடுத்த 10 வருடங்களில் வளர்ந்த ஹீரோக்களாக மாறிய ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என அனைவருடனும் சேர்நது நடித்து விட்டார். சமீபத்தில் பாலிவுட் வரை சென்று ஷாருக்கானுடனும் ஜவான் படத்தில் நடித்துவிட்டார். திரைத்துறையில் வெற்றி பாதையில் பயணித்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டு தொழிலதிபராகவும் களம் இறங்கினார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் '9Skin' என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி தொழில்முனைவோராக களம் இறங்கினார். சருமத்துக்கான க்ரீம், சீரம், ஆயில் போன்ற தயாரிப்புகளை வெளியிட்டார். இவற்றின் ஆரம்ப விலை ரூ.99 ஆக உள்ளது.
அதிகபட்ச விலை ரூ.1899 ஆக உள்ளது. இந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல் வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே 'Femi 9' என்ற நாப்கின் தயாரிப்பை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தினார்.
"சுயநலத்துக்கு பின்னால் பொதுநலன் உள்ளது”
இந்த நிலையில், சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடந்த ஃபெமினா விழாவில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய நடிகை நயன்தாரா, ”சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சென்றடைய வேண்டும்.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். பெண்கள் நல்லா இருந்தா சமுதாயமும் நல்லா இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் உள்ளது போல; ரொம்ப சாதித்த பெண்களுக்கும், ரொம்ப மகிழ்ச்சியாக உள்ள பெண்களுக்கும் பின்னாலும் கண்டிப்பா ஒரு ஆண் உள்ளனர்.
எனக்கு பின்னால் எனது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளார். அவரை சந்தித்து முதலே எனக்கு துணையாகவே உள்ளார். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை என்றால் அதுதான் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் இதுமட்டுமல்லாமல் இதோடு ஏன் நிறுத்துகிறீர்கள் என கேட்பவர்தான் விக்னேஷ் சிவன்.
சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது. சானிட்டரி நேப்கின் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானோரை சென்றடையவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு அனைத்து பெண்களையும் சென்றடைய வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க
Captain Miller Review: ”சம்பவம் இருக்கு” .. தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ..!