Nelson Press Meet : தனியார் ஹோட்டலில் பீஸ்ட் ப்ரஸ் மீட்.. அரசியல் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நெல்சன்..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை ஒரே கட்டமாக உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை ஒரே கட்டமாக உலகம் முழுவதும் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளனர்
பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளநிலையில், தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற 'பீஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் நெல்சன், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பொழுது பேட்டியளித்த பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன், பீஸ்ட் படத்திற்க்காக மால் செட் உருவாக்கினோம். ஒரு ஷாப்பிங் மால் எப்படி நிஜமா இருக்குமோ அதே உயரம், அதே அகலம் போன்றே இதை படத்துக்காக நாங்க ரெடி செஞ்சோம். இதற்கும் முழுக்க முழுக்க சன் குழுமம் தான் உதவி செஞ்சது.
டே 1 முதல் மாறன் சார்கிட்ட கதை சொன்ன நாள் அன்னைக்கு, விஜய் சார் பக்கத்துல இருந்தாங்க. கதை சொல்லி அந்த கதையோட டிஸ்கஷன் 5 நாள் போச்சு. மாறன் சார் அவருக்கு தோணுற ஐடியா சொல்லுவாரு. நானும் எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன். அப்பதான் தெரிஞ்சது அவங்களுக்கு சினிமா மேல எவ்வளவு பேஷன் இருக்குன்னு. பீஸ்ட் படத்துல ஓப்னிங் சீன் வரும். அதுவும் முதல் சீன் சண்டை காட்சி. இந்த ஐடியா கொடுத்ததே மாறன் சார்தான். அதுக்கு ரிலேட்டா நாங்களும் கதையை உருவாக்குனோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மாறன் சார் மற்றும் சன் பிக்சர்ஸ் மற்ற தயாரிப்பாளர்கள் மாதிரி வெறும் தயாரிப்பாளரா மட்டும் இல்லாம, அவங்க மனசுக்கு நெருக்கமான ஒன்னா பீஸ்ட் படத்த நினைச்சாங்க. இதுக்கு நான் அவங்களுக்கு மிகப்பெரிய தாங்க்ஸ் சொல்லிக்குறேன். விஜய் சார்தான் இந்த படத்திற்கு முதல் தொடக்க புள்ளி. நான் அவர்கிட்ட கதை சொன்னப்ப, விஜய் சார் சொன்ன ஒரு வார்த்தை "கஷ்டப்பட்டு பண்ண நான் ரெடி.. மத்த எல்லாத்தையும் நீங்க பார்த்துக்கோங்கன்னு சொன்னாரு". சொன்ன வார்த்தையை கடைசி வரையும் செஞ்சாரு. அவருக்கு இதுக்கு நன்றி தெறிக்கும் விதமா நாங்களும் டீம்மா சேர்ந்து நல்ல படத்த கொடுத்து இருக்கோம்ன்னு நம்புறோம். நாளைக்கு படத்த தியேட்டர்ல பாருங்க.. பார்த்துட்டு படம் எப்படி இருக்குன்னு உங்க விமர்சனத்த சொல்லுங்க என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பீஸ்ட் திரைப்படத்திற்கு ஏன் இசை வெளியீட்டு விழா வைக்கவில்லை என்றும், நடிகர் விஜயின் அரசியல் குறித்த கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர். அதற்கு பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் பதிலளிக்க மறுத்து விட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்