Beast | வெறித்தனம் காட்டப்போகும் பீஸ்ட் மோட்... முதல் சிங்கிள் மற்றும் வெளியீட்டு தேதி விபரம்!
விஜய் விரைவில் தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளாராம் அதனால் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே ..
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் , நெல்சன் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் வசூல் வேட்டை நடைத்திய நிலையில் பீஸ்ட் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
❤️ #absolutepleasure @actorvijay @sunpictures pic.twitter.com/WyH2T52Fwz
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) December 11, 2021
பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மால் ஒன்றை கைப்பற்றி தீவிரவாதிகள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் மக்களை காப்பாற்றுவதுதான் கதை எனவும் தகவல்கள் கசிந்தன. படத்தில் விஜய் ரகசிய அதிகாரியாக நடிக்கிறாராம். கடத்த கதைகளை கையில் எடுப்பதுதான் நெல்சனின் ஏரியா ஆஃப் இண்ட்ரஸ்டாக இருக்கிறது. முன்னதாக வெளியான கோலமாவு கோலிகா மற்றும் டாக்டர் படங்களும் அப்படியான கடத்தல் பாணியில் உருவான படங்கள்தான் . முன்னதாக, பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா சென்றது. இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதற்காக சென்னையில் மால் செட் அமைத்து படப்பிடிப்புகள் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடந்துவந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின. .இந்நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டு நள்ளிரவில் அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி இரவு 12.00 am அளவில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
It’s a wrap for @hegdepooja! Hear what she has to say about shooting for #Beast with #Thalapathy @actorvijay and director @Nelsondilpkumar pic.twitter.com/hz2mBhp7Do
— Sun Pictures (@sunpictures) December 10, 2021
விஜய் விரைவில் குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்ள உள்ளாராம் அதனால் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே படத்தின் டப்பிங் வேலைகளை விரைந்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28 , 2022 இல் வெளியாகும் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.