மேலும் அறிய

‛நான் எதை கேட்டாலும் கொடுப்பேனா...’ கொதித்த சுசித்ரா... ‛நான் புள்ளக்குட்டிக்காரன்...’ பம்மிய பயில்வான்! ஆடியோ ரிலீஸ்!

Bayilvan Ranganathan: ‛‛நீங்க  ரொம்ப எல்லை மீறி போறீங்க. நீங்க ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க...’ -சுசித்ரா

சமீபமாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனின் பரபரப்பான கருத்துக்களால் கோலிவுட் வட்டாரம் திகிலாகி வருகிறது. அவர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளும், புகாரும் எழுந்து வரும் நிலையில், அதே பரபரப்புக்கு சற்றும் குறையாத பாடகி சுசித்ரா குறித்து பயில்வான் பேசிய கருத்துக்கும், நேரடியாக ரியாக்ட் செய்துள்ளார் சுசித்ரா. பயில்வானுக்கு போன் செய்த அவர், அவரிடம் பேசிய ஆடியோ உரையாடலை பகிர, இப்போது அது தான் ஹாட்! இருவருமே பேச்சுக்கு சோடை போகாதவர்கள். எப்படி இருக்கும் அந்த உரையாடல்? கீழே படித்து பாருங்க...

சுசித்ரா: உங்களுடைய லேட்டஸ் வீடியோ பார்த்தேன்... நான் ஒரு பைத்தியம், ட்ரெக் அடிட், யார் செக்ஸ் பேவர் கேட்டாலும் செய்வேன்னு சொல்லிருக்கீங்க... அதுக்கு உங்களிடம் ஏதாவது எவிடன்ஸ் இருக்கா? 

பயில்வான் ரங்கநாதன்: நான் அப்படியெல்லாம் சொல்லலயே...!

சுசித்ரா: இல்ல... சொல்லிருக்கீங்க... அந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புறேன். இந்த மாதிரி உங்களை யாரு சொல்ல சொல்றாங்க? யாராவது சொல்லி இந்த மாதிரி சொல்றீங்களா? இல்லை உங்க கையில ஏதாவது ஆதாரம் இருக்குதா? 

பயில்வான் ரங்கநாதன்: எழுதிக் கொடுப்பதை தான் நான் பேசுவேன். உங்க கருத்தை சொல்லுங்க... நான் பேசிடுறேன். 

 

பயில்வான் ரங்கநாதன்
பயில்வான் ரங்கநாதன்

சுசித்ரா: எனக்கு கருத்தே கிடையாது. நீங்க என்னை பற்றி ரொம்ப அசிங்கமா பேசியிருக்கீங்க. 

பயில்வான் ரங்கநாதன்: இல்ல.. இல்ல... அந்த சமயத்துல பத்திரிக்கையில் வந்துச்சு... அதை தான்...

சுசித்ரா: இல்லை இல்லை... லேட்டஸ்ட் வீடியோ நீங்க போட்டிருக்கீங்க... தனுஷ் டிவர்ஸ் சம்மந்தப்பட்ட வீடியோ! அதுல மறுபடியும் குத்தி குதறியிருக்கீங்க. சுதித்ரா பத்தின்னு, முதல் 10 நிமிடம் என்னை பத்தி பேசியிருக்கீங்க. அது உங்களுக்கு நியாபகம் இல்லையா?  சரி, அதை உங்களுக்கு அனுப்புறேன். 

பயில்வான் ரங்கநாதன்:  சரி...

சுசித்ரா: சுசித்ரா ஒரு ட்ரெக் அடிட். அவங்க ஓட்டலில் போய் கத்து கத்துனு கத்துவாங்க. கார்த்திக் குமார் பாவம், அவர் தான் காப்பாற்றினார். அவர் தான் சிகிச்சை கொடுத்தார். ஆனால், அவங்க முழு பைத்தியமா ஆகிட்டாங்க. யாரு என்ன கேட்டாலும் கொடுப்பாங்கனு ஹிண்ட் கொடுத்து பேசியிருக்கீங்க, அதுக்கு உங்களிடம் எவிடன்ஸ் இருக்கா?

பயில்வான் ரங்கநாதன்: இல்லை... அப்படி சொல்லல... அவர் பேட்டியை தான் போட்டிருந்தேன். அந்த பேட்டி பத்திரிக்கையில் இருந்தது; அதை தான் எடுத்து போட்டிருக்கேன். 

சுசித்ரா: இல்லை... சுசித்ரா பத்தி, உங்களின் சொந்த கருத்தை தான் நீங்க பேசியிருக்கீங்க. 

பயில்வான் ரங்கநாதன்: இல்லை இல்லை.. என்னோட கருத்து இல்லை. உங்க வீட்டுக்காரர் சொன்னதை தான் போட்டேன். ‛நான் தான் அவருக்கு சிகிச்சை அளித்தேன்; அவரை குணப்படுத்த முடியவில்லை... அதனால் தான் விவாகரத்து பண்ணேன்...’ என்று உங்க வீட்டுக்காரர் சொன்னதை தான் நான் சொன்னேன். 

சுசித்ரா: அதை நீங்க அவருக்கு சாதகமா சொல்லிருக்கீங்க... என்னை டோட்டல் பைத்தியம்னு நீங்களும் சொல்லிட்டீங்க!

பயில்வான் ரங்கநாதன்: இல்லம்மா... அவர் சொன்ன தகவலை தான்...

சுசித்ரா: நீங்க சொன்ன தகவலை, அந்த யூடியூப் வீடியோவை உங்களுக்கு அனுப்புறேன். வாட்ஸ்ஆப்பில் கொஞ்சம் ரெஸ்பான்ஸ் செய்யுங்க. நீங்க  ரொம்ப எல்லை மீறி போறீங்க. நீங்க ரொம்ப கேவலத்துக்கு எல்லை மீறி போயிட்டீங்க.

பயில்வான் ரங்கநாதன்: இல்லை... இல்லை...

சுசித்ரா: நீங்களும் இந்த அழைப்பை ரெக்கார்டு பண்றீங்க... நானும் ரெக்கார்டு பண்றேன் தான்! நான் உங்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அந்த வீடியோவை அனுப்புறேன். நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணுங்க. 

பயில்வான் ரங்கநாதன்: கொஞ்சம் நான் பேசுறேன்... அதையும் கேளுங்க...

சுசித்ரா: சொல்லுங்க சொல்லுங்க...!

பயில்வான் ரங்கநாதன்: இப்போ நீங்க ரெடியா இருந்தீங்கன்னா.... அந்த சேனலில் இருந்து ஆட்களை அனுப்பி, உங்க பேட்டியை வாங்கி, உங்க கருத்தை போடுறேன்....

சுசித்ரா: நான் எதுக்கு உங்களிடம் பேசனும்? நீங்க என்னை பத்தி ரொம்ப அசிங்கமா பேசியிருக்கீங்க. 

பயில்வான் ரங்கநாதன்: எல்லாத்துக்கும் ஒரு பிராய்சித்தம் இருக்கு...

 சுசித்ரா: பிராய்சித்தம் பண்ணனும்னா... பப்ளிக்காக வீடியோ போட்டு மன்னிப்பு கேளுங்க. நான் எதுக்கு உங்களிடம் பேசனும். 

பயில்வான் ரங்கநாதன்: இல்லை.. இல்லை... உங்க கருத்தை போடுறேன்...

சுசித்ரா: நான் எந்த கருத்தையும் சொல்லல... நான் ஏன், அதை நிரூபிக்கனும். எந்த ஆதாரமும் இல்லாமல், பேப்பர் செய்தியை வைத்து இஷ்டத்துக்கு பேசுவீங்களா? 

 

சுசித்ரா-முன்னாள் கணவர் கார்த்திக்குமார்
சுசித்ரா-முன்னாள் கணவர் கார்த்திக்குமார்

பயில்வான் ரங்கநாதன்: அவர் பேசிய குற்றச்சாட்டை தான் நான் போட்டிருந்தேன்!

சுசித்ரா: எதுவா இருந்தாலும், உங்க வாயால தானே வந்துச்சு. உங்க மூஞ்சி தானே வீடியோவில் இருக்கு. அவர் மூஞ்சி இருக்கா, அவர் வாய் இருக்கா? பேட்டியின் அடிப்படையில் தான் நான் பேசுறேன்னு நீங்க சொல்லவே இல்லையே...

பயில்வான் ரங்கநாதன்: அப்படி தான் சொல்லிருக்கேன்...

சுசித்ரா: இல்லவே இல்லையே... நீங்க அப்படி சொல்லவே இல்லையே! நான் உங்களுக்கு அந்த வீடியோ அனுப்புறேன். நீங்க முதல் 10- நிமிடத்தை கேட்டுட்டு எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணுங்க. 

பயில்வான் ரங்கநாதன்: அது ஒன்னும் பிரச்னை இல்லை... எனக்கும் குழந்தை குட்டிகள் இருக்கு... 

சுசித்ரா: குழந்தை குட்டி இருக்குல்ல... அவங்களை பத்தி யாராவது இப்படி பேசுனா... பொறுப்பீங்களா? 

பயில்வான்: ஒருத்தர் கொடுத்த பேட்டியை சொன்னது தப்பா?

சுசித்ரா: நீங்க பயங்கர இன்னசென்ட் மாதிரி பேசாதீங்க... பேட்டியை நாலஞ்சு முறை பார்த்து தான் உங்களிடம் பேசுறேன். நீங்க ரொம்ப அப்பாவி மாதிரி பேசாதீங்க. இதுக்கு முன்னாடி, நீங்க யாரை பத்தி, என்னவெல்லாம் சொல்லிருக்கங்கன்னு தெரியும். சும்மா நீதிமன்றம் போனாலே, நீங்க வதந்தி பரப்புற ஆளுன்னு நிரூபனம் ஆகிடும். 

பயில்வான் ரங்கநாதன்: இல்ல... இல்ல... அப்படி கிடையாது!

சுசித்ரா: அப்படியே தான்... இத்தனைக்கும் நீங்க சேனல் ஆரம்பித்து எதுவுமே பண்ணல; யார் தோலிலோ துப்பாக்கியை வைத்து சுடுறீங்க... 

பயில்வான் ரங்கநாதன்: எனக்கு இதில் எதுவும் கிடையாது. சேனல் தான் லாபம் பெறுகிறது. ஓப்பனா சொல்றேன், 80 சதவீதம் லாபத்தை சேனல் தான் பெறுகிறது...

சுசித்ரா: சார்... நீங்க எவ்வளவு காசு வாங்குறீங்க... எவ்வளவு காசு கொடுக்குறீங்கன்னு எனக்கு தேவையில்லை. அதை நீங்க போலீசிடம் சொல்லுங்க! 

பயில்வான் ரங்கநாதன்: நான் என்ன சொல்றேன்னா... உங்க கருத்தை...

சுசித்ரா: என் கருத்து என்னன்னா... உங்களை கைது பண்ணனும். தொடர்ந்து நடிகைகள் மீது அவதூறு பரப்பும் உங்களை கைது செய்ய வேண்டும். நீங்க ஒரு செக்ஸ் செய்தியாளர். எங்கே காசு வாங்குறீங்களோ... அவங்களோடு ‛லவ்டு ஸ்பீக்கரா’ நீங்க ஆகுறீங்க சரியா? 

பயில்வான் ரங்கநாதன்: (மவுனம்)

சுசித்ரா: இந்த சுசித்ரா உங்க முன்னாடி என்ன பாவம் பண்ணுச்சு... அவ்வளவு சந்தோசமா கிழிச்சு எறியுறீங்களே ஒரு பொண்ணை. நாக்குல நரம்பு இல்லாமல், ஒரு பொண்மை அவ்வளவு ஆபாசமா எப்படி பேசுறீங்க? 

பயில்வான் ரங்கநாதன்: ஏங்க... நீங்க கார்த்திக்குமாரை நீங்க டைவஸ் பண்ணலயா? 

சுசித்ரா: உங்க கேள்விக்கு நான் எதுக்கு பதில் சொல்லனும்?

பயில்வான் ரங்கநாதன்: அப்புறம்... இப்படி சொன்னா நான் என்ன பண்றது. 

சுசித்ரா: நான் ஏன் உங்க கேள்விக்கு பதில் சொல்லனும்? நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லுங்க! நானா, உங்களை பத்தி யூடியூப்பில் பேசுனேன்; நீங்க தானே என்னை பத்தி பேசுனீங்க. நீங்க சொல்லுங்க...

பயில்வான் ரங்கநாதன்: அவர் சொன்னதை தான் நான் சொல்லிருக்கேன். டைவர்ஸ் ஆக என்ன காரணம்னு அவர் சொன்னதை தான் நான் சொல்லிருக்கேன். 

சுசித்ரா: போலீஸ் உங்களை விசாரணைக்கு கூப்பிட்டா... அவர் பேரை சொல்லுவீங்களா? 

பயில்வான் ரங்கநாதன்: ஆமாம்... கண்டிப்பா சொல்வேன்!

சுசித்ரா: ஓகே... ரொம்ப நன்றி! 

இவ்வாறு இந்த உரையாடல் நடந்திருக்கிறது. சுசித்ரா பேசிய வேகத்தை வைத்து பார்க்கும் போது, பயில்வான் மற்றும் முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது போலீசில் புகார் செய்ய வாய்ப்புள்ளது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
Tamilnadu Roundup: ஆண்டின் கடைசி நாள்! 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
Tamilnadu Roundup: ஆண்டின் கடைசி நாள்! 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி”எங்களையே கைது பண்றீங்களா! வேடிக்கை பார்க்க மாட்டோம்” கடுப்பான விஜய்Chennai Murder Case: மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.. குற்றவாளிக்கு மரண தண்டனை! பரபரப்பு தீர்ப்பு!Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
Tamilnadu Roundup: ஆண்டின் கடைசி நாள்! 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
Tamilnadu Roundup: ஆண்டின் கடைசி நாள்! 10 மணி வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள்!
Breaking News LIVE: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: வேண்டப்பட்டவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - EPS குற்றச்சாட்டு
Breaking News LIVE: மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: வேண்டப்பட்டவரை காப்பாற்ற அமைச்சர்கள் முயற்சி - EPS குற்றச்சாட்டு
Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
Adani TNEB Tender: திடீரென ரத்தான அதானி டெண்டர்! அதிரடி காட்டிய தமிழக அரசு... காரணம் என்ன?
Year Ender 2024 Auto: எங்கும் ஈவி மயம்..! ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள், ரேஞ்ச் தொடங்கி அம்சங்கள் வரை..!
Year Ender 2024 Auto: எங்கும் ஈவி மயம்..! ஆண்டின் சிறந்த மின்சார ஸ்கூட்டர்கள், ரேஞ்ச் தொடங்கி அம்சங்கள் வரை..!
TVK:
TVK: "2025 நம்ம கையில" சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கப் போகும் விஜய்! தமிழக மனங்களை வெல்லுமா தவெக?
Embed widget