Bayilvan Ranganathan: நயன்-விக்கி கல்யாணம் இப்படிதான்; மிரட்டினாலும் பேசுவேன் - பயில்வான் பரபரப்பு பேட்டி
நயன்தாரா - விக்னேஷ் திருமணம் யானைமேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது - திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி.

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் 401 வது நாளான இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனை அவரசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காயம் பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதிய உணவினை வழங்கினார். இதில் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நடிகை நயன்தாரா- விக்னேஷ்சிவன் திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓ.டி.டியில் விற்பனை செய்து ஆடம்பர கல்யாணமாக யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது. என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன். - பயில்வான் ரங்கநாதன் மதுரையில் பேட்டியளித்தார்.@abpnadu ! pic.twitter.com/xdmtKv0W2K
— Arunchinna (@iamarunchinna) June 9, 2022























