Banuchander on Rajinikanth : சாப்பிட கூட காசு இருக்காது... யாரையுமே அவர் மறக்கவில்லை... ரஜினி குறித்து பேசிய பானுசந்தர்
Banuchander : ரஜினிகாந்த் கஷ்டப்பட்ட காலத்தில் யாரெல்லாம் அவருக்கு உதவி செய்தார்களோ அவர்கள் யாரையும் மறக்காமல் உதவி செய்பவர். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்கள் செயல்களிலேயே தெரிந்து விடும்.
நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என 80களில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் பானுசந்தர். ஏராளமான ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தன்னுடைய மகனை ஒரு ஸ்டாராக்கி பார்க்க வேண்டும் என்ற தனது தாயின் விருப்பத்தால் நடிக்க வந்தவர்.
நடிகர் பானுசந்தர் ஆக்ட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் நடிப்பு பயின்று வந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயின்ற அதே இன்ஸ்டிட்யூட்டில் தான் பானுசந்தரும் ஆக்டிங் பயின்றுள்ளார். ரஜினிகாந்த் பற்றின சில ஸ்வாரஸ்யமான தகவல்களை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
நான் சேர்ந்த சமயத்தில் ரஜினி நடித்த 'அபூர்வ ராகங்கள்' படத்தின் பிரிவியூ போட்டு காட்டினார்கள். அந்த படத்தை பார்த்து நாங்கள் அவரை மிகவும் பாராட்டினோம். எப்பவுமே ரஜினி இன்ஸ்டிட்யூட்டில் தான் இருப்பார். அங்கே பாத்ரூம் அருகே மிகப்பெரிய கண்ணாடி ஒன்று இருக்கும். எந்த நேரத்திலும் அங்கேயே தான் நின்று கொண்டு கண்ணாடியை பார்த்துக்கொண்டே இருப்பார். சிகரெட் பிடிப்பது போல, டக்குன்னு திரும்பி பார்ப்பது, ஸ்டைலாக போஸ் கொடுக்குறது என பண்ணிக்கிட்டே இருப்பார். டைம் கிடைச்ச அங்கே தான் இருப்பார் ரஜினி.
மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்தாரு. சில சமயங்களில் அவர்கிட்ட சாப்பிடக்கூட காசு இருக்காது. அவரோட கல்யாண மண்டபத்துல யாராவது சாப்பிட உட்கார்ந்தா அவங்களை எழுப்பாதீங்க என சொல்வார். அவர் தான் எங்க எல்லாருக்கும் வழிகாட்டியாக இருந்தவர். அவர் ஒரு சாதாரண மனிதர் கிடையாது. அவருக்கு மனசு சரியில்லை என்றால் உடனே இமயமலைக்கு சென்றுவிடுவார். யாருமே அவர் தான் ரஜினி என கண்டுபிடிக்க முடியாத படி அங்கே சென்று தியானம் செய்துவிட்டு எப்போ அவர் மனதுக்கு அமைதி கிடைக்குதோ அப்போ தான் திரும்பி வருவார். இனிமே பேர் வாங்கணும் என அவருக்கு என்ன இருக்கு? ஒரு மனித பிறவியில் அவர் என்ன அடைய வேண்டுமோ அது அனைத்தையும் அவர் அடைந்து விட்டார். அப்படிப்பட்ட உயர்ந்த மனிதர். ஒரு மனிதன் தன்னுடைய கடைசி மூச்சு உள்ள வரையில் அவனுக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும்.
ரஜினிகாந்த் முதலில் தயாரித்த 'வள்ளி' திரைப்படத்தில் அவருடன் இன்ஸ்டிட்யூட்டில் படித்த அனைத்து நண்பர்களையும் அந்த படத்தில் சின்ன சின்ன கேரக்டர் கொடுத்து நடிக்க வைத்தார். அவர் கஷ்டப்பட்ட காலத்தில் யாரெல்லாம் அவருக்கு உதவி செய்தார்களோ அவர்கள் யாரையும் மறக்காமல் உதவி செய்பவர். ஒருவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்கள் செய்யும் செயல்களிலேயே தெரிந்து விடும். வாழ்க்கை என்பது ஒரு பபிள்போல தான். அவ்வளவே தான் வாழ்க்கை.
தனது வாழ்க்கையில் நிறைய தத்துவங்களை பின்பற்றுபவர் ரஜினி. எத்தனையோ ஸ்டார் நடிகர்கள் இருக்கிறார்கள். ரஜினியை காட்டிலும் பல பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்கு வாழ்க்கையில் என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கும் என யாராலும் சொல்ல முடியாது. ஆனால் ரஜினிக்கு நடிப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. அதை அடைந்தே தீருவேன் என தனது கண்டக்டர் வேலையை கூட விட்டுவிட்டு வந்தார். தனக்கு பிடித்ததை நான் நிச்சயம் செய்வேன் என தைரியமாக ஒரு முடிவை எடுத்து அதில் சாதித்தும் காட்டியுள்ளார் ரஜினி என பேசி இருந்தார் நடிகர் பானுசந்தர்.