Dhivya Ganesh: சின்னத்திரை சமந்தா திவ்யா கணேஷுக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?
பாக்யலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கிய லட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு நிலவுகிறது. ஒரு பெண் தனது வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் சவால்களை கொண்டு இந்த சீரியலின் கதை பின்னப்பட்டுள்ளது.
இந்த சீரியலில், குடும்பத் தலைவியாக பாக்கியலட்சுமி இருக்கிறார். அவருடை மூத்த மருமகள் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.
தென் தமிழகமான ராமநாதபுரம் மாவட்டத்தைச்சேர்ந்த இவர், பள்ளிப்படிப்பை முடித்து மதுரையில் கல்லூரி படிப்பையும் முடித்தார். இதனைத்தொடர்ந்து வக்கீல் ஆக வேண்டும் ஆசையில் சென்னை வந்த இவரது வாழ்க்கைப்பயணமே முற்றிலும் மாறிப்போனது. இவரது திறமை இவரை சன்டிவியின் கேளடி கண்மணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து திவ்யா, சுமங்கலி, மகராசி உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார். மேலும் தமிழ் மட்டுமில்லை மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ள திவ்யா கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷூடன் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது, தங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த திருமணம் தடைபட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் மீண்டு தன்னுடைய சீரியல் பயணத்தைத் தொடர்ந்தார்.
View this post on Instagram
அதன்பிறகு தற்போது தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மீண்டும் சீரியலில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். பாக்யலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் தன்னை வெளியில் எங்கு பார்த்தாலும், அனைவரும் ஜெனி என்று அழைப்பதாகவே திவ்யா மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார். பாக்யா குடும்பத்தின் மூத்த மருமகள் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் திவ்யா தனது சிறப்பான நடிப்பின் மூலம், பல ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை சமந்தா என்று அழைக்கப்படும் திவ்யா கணேஷ், அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் தனது ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
இந்நிலையில், திவ்யா கணேஷ் சமீபத்தில் ரசிகர்களுடன் கேள்விக்கு பதிலளித்து இருந்தார். அதில் ஒரு ரசிகர், “உங்களுக்கு எப்போது திருமணம் அக்கா” என்று கேட்டிருந்தார். அதற்கு திவ்யா கணேஷ், “விரைவில் எனக்கு திருமணம். ஆனால், யார் மாப்பிள்ளை என்று தான் தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.