மேலும் அறிய
Advertisement
BAFTA Awards 2024: ஃபப்டா திரைப்பட விழா.. 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர்!
சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் BAFTA எனப்படும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்ற BAFTA திரைப்பட விழாவில் விருதுகளை குவித்த படங்களை பற்றி காணலாம்.
சிறந்த தேசிய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் BAFTA எனப்படும் பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 77வது BAFTA விருது வழங்கும் விழா லண்டனில் உள்ள சவுத்பேங்க் சென்டரில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்றது. இந்த விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியல் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 18 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹைமர் படம் 7 பிரிவுகளிலும், Poor things படம் 5 பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியுள்ளது.
விருதுகளை அள்ளிய படங்கள்
- சிறந்த படம் - ஓப்பன்ஹைமர் (Oppenheimer)
- சிறந்த நடிகை: எம்மா ஸ்டோன் (Poor things)
- சிறந்த நடிகர்: சில்லியன் மர்ஃபி (oppenheimer)
- சிறந்த துணை நடிகை: டாவின் ஜாய் ரேண்டால்ஃப் (The Holdvores)
- சிறந்த துணை நடிகர்: ராபர்ட் டவ்னி (oppenheimer)
- ரைசிங் ஸ்டார் விருது (பொதுமக்களால் தேர்வு) : மியா மெக்கன்னா (Bruce)
- சிறந்த இயக்குநர்: கிறிஸ்டோஃபர் நோலன் (oppenheimer)
- சிறந்த மேக்கப் & சிகையலங்காரம்: நாடியா ஸ்டேசி, மார்க் கூலியர், ஜோஸ் வெஸ்டர் (Poor things)
- சிறந்த ஆடை வடிவமைப்பு: ஹோலி வாடிங்டன் (Poor things)
- சிறந்த ஆங்கில திரைப்படம்:The Zone of Intrest
- சிறந்த ஆங்கில குறும்படம் (அனிமேஷன்): Crab Day
- சிறந்த ஆங்கில குறும்படம்: ஜெல்லி ஃபிஷ் அண்ட் லேப் ஸ்டார் (jelly fish and lap star)
- சிறந்த தயாரிப்பு: Poor things
- சிறந்த ஒலிப்பதிவு: The Zone of Intrest
- சிறந்த இசை (ஒரிஜினல்): ஓப்பன்ஹைமர் (oppenheimer)
- சிறந்த ஆவணப்படம்: 20 days in mariupol
- சிறந்த திரைக்கதை (தழுவல்): அமெரிக்கன் ஃபிக்ஷன் (american fiction)
- சிறந்த ஒளிப்பதிவு: ஓப்பன்ஹைமர் (oppenheimer)
- சிறந்த படத்தொகுப்பு: ஓப்பன்ஹைமர் (oppenheimer)
- சிறந்த படக்குழு: The Holdovers
- ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம்: The Zone of Intrest
- சிறந்த அறிமுக எழுத்தாளர், இயக்குநர் அல்லது தயாரிப்பாளருக்கான விருது: Earth Mama
- சிறந்த அனிமேஷன் படம்: தி பாய் அண்ட் ஹீரோன்
- சிறந்த விஷூவல் எஃபக்ட்: Poor things
- சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): அனாடமி ஆஃப் ஃபால்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion