Watch Video: கழுத்தில் விழுந்த பார்.. கதறாமல் கப்சிப் ஆன பப்லு ப்ரித்வி: வைரலாகும் வீடியோ..!
நடிகர் பப்லு ப்ரித்விராஜ் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1979 -ல் வெளியான நான் வாழவைப்பேன் படம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பப்லு பிரித்விராஜ். அதன் பின்னர், மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த பப்லு பிரித்விராஜ் கே. பாலசந்தர் இயக்கிய 'வானமே எல்லை' திரைப்படத்தில் நடித்தார்.
அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘அவள் வருவாளா’ படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த, பப்லு பிரித்விராஜூக்கு ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தன. இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது இவருக்கும் நடிகர் சிலம்பரசனுக்கு இடையேயான நடந்த வார்த்தை மோதல் பேசு பொருளானது. அதனைத் தொடர்ந்து, அரசி,வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வரும் பப்லு பிரித்விராஜ், பெசன்ட் நகரில் சா ரீப்ளிக் டீக்கடையை நடத்தி வருகிறார். உடற்பயிற்சி மீது தீவிர ஆர்வம் கொண்ட பிரித்விராஜ் வழக்கம் போல, சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஜெஸ்ட் கிளாஸ் செயய தயாராகிக் கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக கம்பி அவரது கழுத்திலே விழுந்தது. இது தொடர்பான வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பப்லு பிரித்விராஜ், நான் நலமாக இருக்கிறேன் என்றும் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்