(Source: ECI/ABP News/ABP Majha)
Baba Re-release: முடிந்தது டப்பிங்...முழு வீச்சில் ரீ-ரிலீஸூக்கு தயாராகும் பாபா... வைரலாகும் ரஜினி போட்டோ...!
Baba Re-release Dubbing Finished: 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம், மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அப்படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் முடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
பாபா ரீ-ரிலீஸ்:
Baba vanthutu irukaaru ? Is that is true ? Unmai na vera level 🔥#Jailer #Thalaivar170 #LalSalaam @rajinikanth pic.twitter.com/tktA3kbmpA
— R͏A͏T͏H͏E͏E͏S͏H͏ R͏A͏J͏I͏N͏I͏ ॐ+†+☪=🤘 (@realrawrathesh1) November 20, 2022
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
வெளியான சமயத்தில் மோசமான தோல்வியை தழுவிய பாபா திரைப்படம், மீண்டும் புதுப்பொலிவுடன் திரைக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. மேலும் முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு (எடிட்டிங்) செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தற்போதைய நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்
பாபா படம் 2002 ஆம் ஆண்டு வெளியான போது, “என்னடா படம் இது..ஒன்னுமே புரியல” என ரசிகர்கள் கூறிய காலம் எப்போதோ மாறிவிட்டது. பாபா படத்தை பிடிக்காதவர்களைக் கூட, கே டிவியும் சன் டிவியும் படத்தை ரீ-டெலிகாஸ்ட் செய்து அப்படத்தை பிடிக்க வைத்து விட்டனர். யார் என்ன சொன்னாலும், பாபா ரசிகர்களுக்கு பிடித்த படம் என்பதே உண்மை. இப்படத்தின் ரீ-ரிலீஸ் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் அனைவரும், “ரிலீஸ் எப்போ?” என்று படக்குழுவை அன்புத் தொல்லை செய்து வருகின்றனர். 90’ஸ் கிட்ஸ் மட்டுமன்றி படம் வெளியான புதிதில் குழந்தையாக இருந்த 2கே கிட்ஸ் கூட, பாபா படத்தை முதன் முறை தியேட்டரில் பார்க்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.
டப்பிங்கை முடித்த ரஜினி:
#BaBaReRelease Dubbing Completed🎙😎🔥@rajinikanth @Suresh_Krissna@mkoirala @arrahman @ash_rajinikanth @brindagopal @PDdancing @offl_Lawrence @AshishVid @GoundamaniOffl @DelhiGaneshOffl @09riyazkhan#Vaali @Vairamuthu #GK #ChottaKNaidu #VTVijayan @ParasRiazAhmed1 @V4umedia_ pic.twitter.com/wR8TqWYq65
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 28, 2022
இந்நிலையில், பாபா படத்தின் புதிய டப்பிங் பணிகள் முடிவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள புகைப்படங்களில், நடிகர் ரஜினி டப்பிங் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால், இப்படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக எழுந்துள்ளது. புதுப்பொலிவுடன் தயாரிக்கப்பட்டுளள பாபா படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.