Baakiyalakshmi serial : கோபி உத்தமன் கிடையாது...உண்மையை போட்டுடைத்த மூர்த்தி...ஈஸ்வரி முடிவு என்ன தெரியுமா?
கோபியின் தந்தை மூர்த்தி, தனது அறையில் இருந்து வெளியே வந்து, “உன் பிள்ளை பத்தி இவ்வளவு பெருசா கவலைப்படணும்ன்னு அவசியம் இல்லை. கோபி ஒன்னும் உத்தமன் கிடையாது என ஈஸ்வரிடம் தெரிவிக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி குறித்த உண்மைகள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிய வந்த நிலையில் இனி வரும் எபிசோட்களில் என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவியை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.பாக்கியா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்கியா சோதனை செய்தது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் பாக்கியாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபி மீதான கோபத்தால் மும்பை செல்லும் முடிவுக்கு வந்துள்ள ராதிகாவை அவரது அம்மாவும், அண்ணனும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் போது ராஜேஷ் அங்கு வருகிறார். அவர் ராதிகாவிடம் கோபிக்கும் உனக்குமான சண்டையில் மகள் மயூ பாதிக்கப்படுவதாக கூறி விரைவில் அவரை தன்னுடன் கூட்டிச் செல்வேன் என சொல்லி விட்டு செல்கிறார். இதனையடுத்து ராதிகாவின் அண்ணன், கோபியை திருமணம் செய்துக்கொள்.ராஜேஷ்க்கு சரியான பாய்ண்ட் கிடைத்துள்ளது. அப்புறம் உன் பொண்ணு மயூ உன்னுடன் இருக்கமாட்டா என அறிவுரை வழங்குகிறார்.
இது ஒருபுறமிருக்க மறுபுறம் கோபி வீட்டில் வந்து ராஜேஷ் அவரைப் பற்றிய உண்மையெல்லாம் சொல்லிவிட்டதால் கோபியின் தாய் ஈஸ்வரி, பேரன் எழிலிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். ஒரு கட்டத்தில் பொறுத்து பொறுத்துப் பார்த்த கோபியின் தந்தை மூர்த்தி, தனது அறையில் இருந்து வெளியே வந்து, “உன் பிள்ளை பத்தி இவ்வளவு பெருசா கவலைப்படணும்ன்னு அவசியம் இல்லை. கோபி ஒன்னும் உத்தமன் கிடையாது. இப்போ வந்துட்டு போறவன் சொன்னது அத்தனையும் உண்மை. அவனுக்கு ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்கு. இது எனக்கும் எழிலுக்கும் தெரியும்” என கூறி விட அதைக்கேட்டு ஈஸ்வரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
மூர்த்தி சொல்வது குறித்து எழிலிடம் மீண்டும் ஈஸ்வரி கேட்க, அவரும் அப்பாவை இன்னொரு பொண்ணு கூட நிறைய தடவை பார்த்திருக்கேன்” என ஒப்புக் கொள்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி கோபத்தில் கோபிக்கு போன் செய்து எங்கிருந்தாலும் உடனே வீட்டுக்கு வரணும் என சொல்கிறார். ஏன் என்னாச்சு என கோபி கேட்க, யாரோ ஒருத்தன் வீட்ல வந்து உன்னைப் பத்தி தப்பு தப்பா பேசிட்டு போறான். உன் தாத்தாவும், எழிலும் ஏதேதோ சொல்றாங்க. நீ உடனே வா” என சொல்கிறார்.
இதைத் தொடர்ந்து கடையில் இருக்கும் பாக்கியாவை கூப்பிட மகள் இனியா செல்ல, கோபி ராதிகாவை பற்றிய உண்மை தெரிஞ்சிருக்குமோ என்ற பதற்றத்தில் வீட்டுக்கு காரில் வருவது போல நேற்றை எபிசோட் முடிவடைந்துள்ளது. இன்றைய எபிசோட்டில் கோபி வசமாக சிக்குவாரா..இல்லை வழக்கம் போல தப்பிப்பாரா என்பதை அறிய இன்றைய எபிசோட்க்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்