Cinema Round-up: நயன்தாரா படத்திற்கு தடை?..வசூலை அள்ளும் அவதார் 2; சர்ச்சையில் ‘துணிவு’ - சினிமா செய்திகள்!
உலகளவில் சாதனை படைத்து வரும் ஹாலிவுட்டின் அவதார் 2 படத்தை பற்றியும் உள்ளூர் பிக்பாஸ் சீசன் 6 பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
3600 கோடியை வசூல் செய்த
Neytiri being an expert marksman never gets old 🔥 #AVATARTheWayofWater pic.twitter.com/ayFbt7wffH
— Amy 🇨🇦 The Way of Water (@inkedrescuer) December 19, 2022
அவதார்: தி வே ஆப் வாட்டர் படம் டிசம்பர் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் வசூலை அள்ளி வருகிறது. தமிழ் டப்பிங் பார்க்க சென்ற மக்களுக்கு சமகாலத்தில் பேசப்படும் வார்த்தைகளும் இடம் பெற்றிருந்ததால் கலகலப்பாக அவதார் படம் அமைந்தது. இந்நிலையில் அவதார் படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.3600 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசேதான் கடவுளடா
View this post on Instagram
நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் இரண்டாம் பாடலாக ‘காசேதான் கடவுளடா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை வைசாக் எழுதி பாடியுள்ள நிலையில் நடிகை மஞ்சு வாரியரும் இப்பாடலை இணைந்து பாடியுள்ளார். ஆனால் அந்த பாட்டில் மஞ்சு வாரியரின் குரல் இடம்பெறவில்லை என்பது குறிப்படதக்கது.
கனெக்ட் படம் வெளியாவதில் சிக்கலா?
View this post on Instagram
நயன்தாராவின் பிறந்தநாளன்று, கனெக்ட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம், வருகிற டிசம்பர் 22 ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள், இப்படத்தை திரையிட மறுத்துள்ளதாக சில தகவல் வந்தது. ஆனால், தமிழக திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அத்தகவலை மறுத்துள்ளார்.
டாம் க்ரூஸின் வைரல் வீடியோ
A special message from the set of #MissionImpossible @MissionFilm pic.twitter.com/sfnWWluLyl
— Tom Cruise (@TomCruise) December 18, 2022
ஹாலிவுட் நாயகன் டாம் க்ரூஸ், வெளியாகபோகும் மிஷன் இம்பாஸிபிளின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஹெலிகாப்டரிலிருந்து “டபக்” என்று குதித்து, அழகாக ஸ்கை டைவிங் செய்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது
பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜனனி
#Janani Eliminated#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/J5JvSzVeX1
— BIGG BOX TROLL (@drkuttysiva) December 17, 2022
கடந்த வாரத்தில், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சித்தா மற்றும் விக்ரமன் ஆகியோர் எவிக்ஷன் நாமினேஷனில் இருந்தனர். இதில் ஏடிகே வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், கடைசி நேர ட்விஸ்ட் ஆக ஜனனி வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியது. அந்த தகவலின் படி, ஜனனி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்