'Pawan Kalyan' tattoo :பவன் கல்யாண் பெயரை டாட்டூவாக போட்ட நடிகை! பவன் கொடுத்த அட்வைஸ் !
அந்த சமயத்தில் பவன் கல்யாண் குடித்து முடித்த டீ கப்பை கேட்டாராம் அஷு. அப்போது பவன் கல்யாண்...
அஷு ரெட்டி :
தெலுங்கு திரைத்துறையில் பிரபலமானவர் அஷூ ரெட்டி . அவ்வபோது சில படங்களில் தலைக்காட்டி வரும் இவர் , குத்து பாடல்களுக்கும் அவ்வபோது நடனமாடி வருகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களுக்கு அதிக பரீட்சியம் .
View this post on Instagram
பவன் கல்யாண் டாட்டூ ;
அஷு ரெட்டி , தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே. கல்லூரிகளில் படித்த நாட்களில் அவரது புகைப்படத்தை வைத்து பிராத்தனையெல்லாம் செய்வாராம். பவன் கல்யாண் திரைப்படம் அனைத்தையும் முதல் நாளே பார்த்துவிடுவாராம் . இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் அஷு தற்போது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நடிகர் பவன் கல்யாணின் பெயரை தனது விலா பகுதியில் பச்சைக்குத்தியுள்ளார். அதற்கு கேப்ஷனாக “ நான் எந்த டாட்டுவையும் இவ்வளவு நேசித்தது கிடையாது.. உங்களின் பெயரை பச்சைக்குத்தும் வரையில்“ என குறிப்பிட்டுள்ளார் அஷு. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
பவன் கல்யாண் கொடுத்த அட்வைஸ் :
பவன் கல்யாணுக்கு தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் , அதிலும் பாதி பேர் தீவிர ரசிகர்கள் . நடிகை பதிவிட்ட புகைப்படத்தை சிலர் ட்ரால் செய்து வரும் நிலையில் , இந்த புகைப்படத்தை கிண்டல் செய்தால் அது நமது பவன் கல்யாணையே இழிவு படுத்துவதற்கு சமம் என தீவிர பவன் பக்தியுடன் சிலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பவன் கல்யாணை அஷு மூன்று முறை சந்தித்திருக்கிறார். மூன்றாவது முறை அவரை சந்தித்த பொழுது பவன் கல்யாண் அஷு..என அடையாளம் கண்டுக்கொண்டாராம் . மேலும் மூன்று மணி நேரம் நடிகையுடன் உரையாடியிருக்கிறார். அந்த சமயத்தில் பவன் கல்யாண் குடித்து முடித்த டீ கப்பை கேட்டாராம் அஷு. அப்போது பவன் கல்யாண் சிரித்துக்கொண்டே “உடைந்துபோகக்கூடிய பொருள்சார்ந்த விஷயங்களைச் சேகரிப்பதற்குப் பதிலாக, செலவழித்த தருணங்களை ரசிக்க வேண்டும் “ என பவன் கல்யாண் தனக்கு அட்வைஸ் செய்ததாக தெரிவித்துள்ளார் நடிகை.