இயக்குநரிடம் விஷால் வைத்த கோரிக்கை... நன்றி சொன்ன ஆர்யா! எனிமி பட சுவாரஸ்யம்!!
சென்னை: எனிமி படத்தில் தனக்கு அதிகமான மாஸ் காட்சிகள் வைக்க இயக்குநரிடம் கோரிக்கை வைத்த விஷாலுக்கு ஆர்யா நன்றி தெரிவித்தார்.
விஷால், ஆர்யா, கருணாகரன், மிருணாளினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் எனிமி. ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தை வினோத்குமார் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைக்க பின்னணி இசையை சாம். சி.எஸ் உருவாக்கியுள்ளார்.
இப்படமானது நவம்பர் நான்காம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிஜ வாழ்வில் நெருங்கிய நண்பர்களாக வலம் வரும் விஷாலும், ஆர்யாவும் இப்படத்தில் எதிரிகளாக நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய நடிகர் ஆர்யா, “ 'எனிமி' படம் குறித்து முதலில் என்னிடம் கூறியது விஷால்தான். ஒரு கதை கேட்டேன், உனக்கு நன்றாக இருக்கும் என்றார். ஆனந்த ஷங்கர் கதையைக் கூறியவுடன் ரொம்ப பிடித்துவிட்டது.
இரண்டு கதாபாத்திரங்களில் எதில் நடிப்பது என்று ஒரு குழப்பம் நிலவியது. படத்தில் எனக்காக சிறப்பான மற்றும் மாஸான காட்சிகள் அதிகமாக வைக்கும்படி விஷால் இயக்குநரிடம் கூறியுள்ளார். வேறு யாரும் இப்படிச் சொல்வார்களா என்று தெரியவில்லை. அது விஷாலால் மட்டும்தான் முடியும்.
க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை இப்போது பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. மீண்டும் இப்படியொரு காட்சியில் இருவரும் நடிப்போமா என்று தெரியவில்லை. உண்மையில் நாம்தான் பண்ணினோமா என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நானும், விஷாலும் மீண்டும் ஒரு அற்புதமான படத்தில் இணைந்து நடித்துள்ளோம்.
Meeting all my Dear Friends from the Media after a very very long time....
— Vishal (@VishalKOfficial) October 29, 2021
Thanks for always being there for me & being the same to me since Chellame, GB pic.twitter.com/dmzncZOGdo
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வினோத்துக்கு நன்றி. இதன் காட்சிகள் முதலில் சிங்கப்பூரில் படமாக்கப்பட இருந்தது. கொரோனா பிரச்னையால் துபாயில் படமாக்கினோம். அதற்கு 3 மடங்கு அதிகமாக செலவானது. இந்தப் படத்தில் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: ’மறுபடியும் அப்பாவுக்கு படம் பண்ணனும்...’ கண்ணீருடன் சிவா கைகளை பிடித்த செளந்தர்யா ரஜினிகாந்த்!