Arvind swamy | "ரொமான்ஸ் வரல.. அழுதுட்டேன் “ - ரோஜா பட அனுபவங்களை பகிர்ந்த அரவிந்த் சாமி!
நாயகி மதுபாலா உள்ளிட்டவர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அந்த காட்சியில் நடிக்க வைத்துள்ளனர்.
அரவிந்த் சாமி:
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ திரைப்படத்தில் ரஜினியின் தம்பியாக சிறு கதபாத்திரம் ஏற்று , கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் அரவிந்த் சாமி. மேக்கப் போடாமல நடித்த வெகு சில நடிகர்களுள் அரவிந்த் சாமியும் ஒருவர் .1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் முழு நீள கதாநாயகனாக களமிறங்கிய அரவிந்த் சாமிக்கு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு இளம்பெண்கள் பலரும் “எனக்கு அரவிந்த் சாமி போலத்தான் மாப்பிள்ளை வேண்டும் “ என அடம்பிடித்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் எவ்வளவு தீவிரமான ஃபேன்ஸ் அரவிந்த சாமிக்கு இருந்திருக்கிறார்கள் என்று. இன்றும் இருக்கிறார்கள் !!.
View this post on Instagram
ரோஜா ரொமாண்டிக் சீன் :
எந்த ஒரு நடிகராக இருந்தாலும் தனது முதல் பட அனுபவத்தை யாராலும் மறக்கவே முடியாது ! அப்படித்தான் அரவிந்த் சாமிக்கும். முதல் படமான ரோஜா திரைப்படத்தில் ரொமாண்டிக் காட்சி ஒன்று இருக்கும். அதாவது குளித்துவிட்டு வரும் நாயகி மதுவின் கழுத்தில் இருக்கும் நீர்த்துளியை தொட்டுவிட்டு , அவரை நாயகன் அரவிந்த்சாமி முத்தமிடுவது போன்ற ஒரு காட்சியை மணிரத்தினம் வைத்திருந்தார். அந்த காட்சியில் நடிக்கும் பொழுது தனக்கு ரொமான்ஸ் வரவில்லை என அரவிந்த் சாமி அழுதுவிட்டார். உடனே இயக்குநர் மணிரத்தினம் , நாயகி மதுபாலா உள்ளிட்டவர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அந்த காட்சியில் நடிக்க வைத்துள்ளனர். அதனை நினைவு கூர்ந்த அரவிந்த் சாமி வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அது என்கிறார்.
View this post on Instagram
வில்லனாக நடிக்க ஆசை :
அரவிந்த் சாமி தன்னை ஒரு வெர்சட்டைல் நடிகராக அடையாளப்படுத்த போராடியவர். அது 20 வருடங்களுக்கு பிறகுதான் கைக்கூடியது. சாக்லெட் பாயாக மட்டுமே பார்க்கப்பட்டவர் , தற்போது நெகட்டிவ் ரோல்ஸ் , மாஸ் ஹீரோ படங்கள் என நடிக்க தொடங்கியிருக்கிறார். என் சுவாச காற்றே திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கவில்லை. 10 வருடங்களுக்கு பிறகு கடல் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தவருக்கு தனி ஒருவன் , போகன் போன்ற திரைப்படங்கள் வேறு ஒரு அடையாளத்தை கொடுத்தது.தற்போது கள்ளபார்ட் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார். ஆனாலும் வில்லகான நடிக்க வேண்டும் என்பதுதான் அரவிந்த் சாமியின் ஆசை. விரைவில் ஒரு படம் இயக்குவேன் என்றும் நம்பிக்கையாக கூறுகிறார்.