எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனையே இல்லைங்க.. விடுங்க.. போட்டு உடைத்த அருண் விஜய்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
தன் சிறு வயது முதல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையுடன் வலிய வந்து, பல தோல்விகள், வெற்றிகளைக் கடந்து ஹீரோவாக தற்போது திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் அருண் விஜய்.
அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் தவிர, ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி, ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனை ஒட்டி நடந்த பிரஸ் மீட்டில் நடிகர் சிவ கார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அருண் விஜய்... நீங்கள் தான் பிரச்சனை. எனக்கும் சிவாவுக்கும் ஒரு பிரச்சனையுமே இல்லை என்று கூறினார். நாங்கள் சக நடிகர்கள் தான். நீங்கள் தான் பிரச்சனை இருப்பதாக கூறி அதை பரப்பி விடுகிறீர்கள் என்று கூறியுள்ளார்.
ரீவைண்ட பண்ணிப் பார்போமா?
கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்த்தால், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் ரிலீஸ் ஆன வேளையில் அருண் போட்ட ட்வீட் ஒன்று நினைவுக்கு வரும். அந்த ட்வீட்டில் நடிகர் அருண் விஜய், நடிகர் சிவகார்த்திகேயனை ஏகத்துக்கும் திட்டியிருப்பார். சிவகார்த்திகேயனின் புகைப்படத்தை பகிர்ந்து நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் என்கிற விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பாங்க என்று பதிவிட்டிருந்தார். அந்த ட்வீடால் சிவாவின் ரசிகர்கள் பொங்கி எழுந்து வறுத்தெடுத்தனர். நீ எல்லாம் ஒரு நடிகரா என்று கழுவி ஊற்றினர்.
இந்த நிலையில், அது நான் போட்ட பதிவு அல்ல, என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும், தற்போது தான் அது சரி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆகையால், அந்த பதிவினை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார். இருப்பினும் இதை நம்பாமல் அவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு பிரச்சானை இருக்கு என்றே ரசிகர்கள் பேசிவந்தனர்.
யானை டீஸர் வெளியீடு:
இந்நிலையில் யானை டீஸர் வெளியானது. அதை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் அருண் விஜய்க்கும் யானை படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அருண் விஜய்யும் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அருண் விஜய் மகன் அர்னவ் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அருண் விஜய், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி விஜய் அர்னவ்விற்கு உங்கள் வாழ்த்தை தெரிவிக்கிறேன்என்று பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில் தான் பழைய சர்ச்சையைப் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அருண் விஜய் மறுப்பு தெரிவித்துள்ளார்.