Arulnithi: ''என்னை திட்டுனாங்க.! கிளைமேக்ஸில் பிரச்சனை'' - நடிகர் அருள்நிதி ஓபன் அப்!
தான் செய்யும் கதை தேர்வுகள் குறித்தும், சினிமாத்துறை குறித்தும் நடிகர் அருள்நிதி ஓபனாக பேசியுள்ளார்
கதை தேர்வு கில்லி..
”கதை தேர்வுனா அருள்நிதி மாதிரி இருக்கனும்பா” என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவலான கருத்துகள் இருக்கிறது. அந்த அளவுக்கு தனக்கு பொருத்தமான , நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதீத படங்களில் அவசர கதியில் நடித்து , பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டிருக்காமல், விரல் விட்டு எண்ணும் அளவில் படங்களில் நடித்தாலும் கூட , அது தனக்கு திருப்தியான கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என சினிமாவை நன்கு புரிந்தவராக புத்திசாலி தனத்துடன் இயங்கும் வெகு சில நடிகர்களுள் அருள்நிதியும் ஒருவர். இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் அது குறித்து அருள்நிதி மனம் திறந்திருக்கிறார்.
View this post on Instagram
கிளைமேக்ஸில் பிரச்சனை..
அதில் ”பொதுவா என்னுடைய எல்லா படங்களிலும் கிளைமேக்ஸில் பிரச்சனை வரும். ஒன்னு ஆடியன்ஸுக்கு புரியும் இல்லை புரியாது. படம் நல்லாயிருக்கு நல்லாயில்லைனு சொல்லுவாங்க. ஆனால் ஆடியன்ஸ் என் படம் புரியவே இல்லைனு சொல்லிடுவாங்க. ஒன்னு நாம அந்த படத்தை அதீத கவனத்துடன் பார்த்திருப்போம் . இல்லைனா சிக்கலாக படத்தை எடுத்து வைத்திருப்போம். களத்தில் சந்திப்போம் படம் எனக்கு அத்தகைய சிக்கலான சூழலை உருவாக்கல. நிம்மதியா இருந்துச்சு.மௌன குரு படம் வெளியான சமயத்தில், என்னை திட்டுனவங்க, என்னை ஏற்றுக்கொள்ளாதவர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் உனக்கு ஏன் இந்த வேலை என கேட்டவர்கள் எல்லோருமே என்னை பாராட்டினாங்க.
கதை தேர்வுகளில் கவனம்..
இதை என்னிடம் எதிர்பார்க்கவில்லை அப்படினு சொன்னாங்க. அந்த படத்திற்கு பிறகு கதை தேர்வுகளில் எனக்கு அதிக கவனம் வந்துடுச்சு. ஆனாலும் நடிப்பில் நான் இன்னும் நிறைய மாறுதல்களை கொண்டுவர நான் உழைக்க வேண்டும்.எனக்கு வசதியாக நடிக்க இந்த த்ரில்லர் கதாபாத்திரங்கள் அமைந்து விடுகிறது. ஆனால் அதை மீறி நான் பண்ணா செயற்கையாக மாறிவிடும். சில கதைகளை நான் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க மாட்டேன். மனதுக்கு பிடித்த கதையாக இருந்தால் நினைவுல இருக்கும் ஆனாலும் சில கதைகளை நம்மால சொல்லவே முடியாது அந்த அளவுக்கு இருக்கும் “ என்றார் அருள்நிதி.