AR Rahman: நிறைவேறாமல் போன ஆஸ்கர் நாயகன் ஆசை! விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த ஏ.ஆர்.ரகுமான்!
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் - சாய்ரா பானு விவாகரத்து முடிவை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைதளத்தில் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு பற்றி பார்ப்போம்.
தென்னிந்திய திரை உலகமே கொண்டாடும் அளவுக்கு, தன்னுடைய தனித்துவமான இசையால் பிரபலமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையில் வெளியான 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்கிற பாடல், இந்திய சினிமா நட்சத்திரங்களின் கனவாக இருந்த, ஆஸ்கர் விருதை வென்றது.
பெரிதாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இசையமைப்பாளர், என ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா தன்னுடைய வழக்கறிஞர் மூலம், நேற்று அறிக்கை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியான போது... இது உண்மையா? அல்லது வதந்தி பரப்பப்படுகிறதா? என ரசிகர்கள் மட்டும் இன்றி சினிமா துறையை சேர்ந்த பலர் குழம்பிய நிலையில், இந்த தகவல் சமூக வலைதளத்திலும் அதிக அளவிலான விவாதத்திற்கு ஆளானது.
தற்போது தென்னிந்திய திரை உலகத்தின் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ள, சாய்ரா பானு - ஏ ஆர் ரகுமானின் விவாகரத்துக்கான பின்னணி குறித்த தெளிவான தகவல்கள் தெரியவில்லை என்றாலும், சாய்ரா பானு வழக்கறிஞர் மூலம் வெளியிட்ட அறிக்கையில், "திருமணமாகி 29 வருடங்களுக்கு பின்னர் ஏ ஆர் ரகுமானை பிரியும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும், சில உணர்ச்சி பூர்வமான அழுத்தத்திற்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தங்கள் இருவருக்கு இடையேயும் தீர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டதே திருமணம் முறிவுக்கு காரணம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது".
மிகுந்த மன வலியுடன் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சாய்ராதெரிவித்திருந்தார். சாய்ரா தரப்பில் இருந்து வெளியான அறிக்கைக்கு பின்னர், தன்னுடைய திருமண முறிவு குறித்து, ஏ ஆர் ரகுமான் தரப்பிலும் நள்ளிரவு 12:10 மணி அளவில் ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவு போடப்பட்டது. " அதில் ஏ ஆர் ரகுமான், விவாகரத்து குறித்து மௌனம் கலைக்கும் விதமாக போட்டிருந்த பதிவில், "நாங்கள் இருவரும் 30 ஆண்டுகளை ஈட்டுவோம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத ஒரு முடிவாக தெரிகிறது, கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் எடையை கண்டு நடுங்கலாம். இந்த பலவீனமான அத்தியாயத்தை நோக்கி நாம் நடக்கும்போது என தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு கொடுக்குமாறு ஏ ஆர் ரகுமான் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது".
ALSO READ | AR Rahman Net Worth: 57 வயதில் மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?