மேலும் அறிய

Singer Chitra: இதயத்தை துளைத்து சென்றுவிட்டாய்.. மறைந்த மகள் பிறந்தநாளில் பாடகி சித்ரா கண்ணீர் பதிவு!

Singer Chitra: இன்று தனது மகளின் பிறந்தநாளை ஒட்டி பாடகி சித்ரா தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

Singer Chitra: பிரபல பின்னணிப் பாடகி சித்ரா, தன் மறைந்த மகளின் பிறந்த நாளான இன்று உருக்கமான வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். 
 
சின்னக்குயில், இசைக்குயில் என ரசிகர்களால் அழைக்கப்படும் சித்ரா கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் முன்னணி பின்னணி பாடகியாக கோலோச்சி வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அசாமி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனக்கென தனி இடத்தைப் பிடித்த சித்ரா, ரசிகர்கள் என்றென்றும் விரும்பும் குயிலிசைப் பாடகி. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றே கூறலாம். 
 
சித்ரா இதுவரை ஆறு முறை தேசிய விருதுகளையும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும், பல்வேறு மாநில விருதுகளையும், இந்தியாவின் மிக உயரிய பத்மவிபூஷண் விருதையும் பெற்றுள்ளார். 
 
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட சித்ரா, 1988ம் ஆண்டு விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2002ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நந்தனா எனத் தங்கள் குழந்தைக்கு சித்ரா -விஜய் சங்கர் பெயரிட்டனர். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நீச்சல் குளத்தில் தவறி விழுந்து நந்தனா தன் 9ஆம் வயதில் உயிரிழந்தார். தனது மகளை இழந்த பாதிப்பில் சித்ரா உருக்குலைந்து போன சூழலில், அவருக்கு திரையுலகினர் பக்கபலமாக இருந்தனர். இந்நிலையில், மகளை இழந்து ஒவ்வொரு ஆண்டும் மனம் வருந்தும் சித்ரா, தன் மகளின் பிறந்த நாளில் உருக்கமான பதிவினைப் பகிர்ந்து வருகிறார். 
 
அந்த வகையில் இன்று தனது மகளின் பிறந்த நாளை ஒட்டி பாடகி சித்ரா, தனது பேஸ்புக் பக்கத்தில் நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், “நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா” எனப் பதிவிட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டு இதே நாளில் சித்ரா வெளியிட்ட தனது பதிவில், “சொர்க்கத்தில் இன்று தேவதைகளுடன் நீ பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருப்பாய் மகளே. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உனது வயது என்றைக்கும் கூடாது. என்னை வீட்டு தூரத்தில் இருந்தாலும் பத்திரமாய் இருப்பாய் என்று எனக்கு தெரியும். இன்றைக்கு கொஞ்சம் கூடுதலாக உன்னை மிஸ் பண்றேன். ஐ லவ் யூ – மிஸ்  யூ” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சித்ராவுக்கு அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் அவரது பதிவில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 
 

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget