Watch Video: வாழ்கையையே மாத்தி போட்ருச்சு.. லதா ஜி சொல்லிக்கொடுத்த பாடம்.. ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
லதா மங்கேஷ்கரிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதை ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.
இந்தியாவின் பிரபலமான பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். லதா ஜி என அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் தமிழில் வலையோசை கலகலவென உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
மும்பையில் வசித்து வந்த அவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 92. பாடகி லதாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர் குறித்து பேசி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது
இது மிகவும் சோகமான நாள். அவர் பெங்காலி, உருது என பல மொழிகளில் பாடியிருக்கிறார். அவருடனான அனுபவத்தை பற்றி கூற வேண்டுமானால், நான் அவரை வைத்து சில பாடல்களை பதிவு செய்திருக்கிறேன்.
View this post on Instagram
அவருடன் இணைந்து பாடியிருக்கிறேன். சில இசை நிகழ்ச்சிகளில் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். மேடைகளில் பாடுவது குறித்து அவரிடம் நான் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொண்டேன். நான் ஒரு இசையமைப்பாளர் என்பதால், பாடுவதை சீரியஸாக எடுத்ததில்லை.
ஒரு முறை, மாலை 4 மணிக்கு பிறகு ரிகர்சல் முடிந்து அவர் ரூமுக்கு சென்றார். அங்கு சென்ற அவர் இசை நிகழ்ச்சிக்காக மிக மெதுவாக, ஒவ்வொரு வரியையும் பாடி பயிற்சி செய்து கொண்டிருந்தார். நான் அந்த வழியாக செல்லும் போது அதை பார்த்தேன். அந்த நிகழ்வு என்னை அப்படியே மாற்றிப்போட்டுவிட்டது. அந்த நிகழ்வுக்கு பிறகு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்னர் பயிற்சி செய்து விட்டுதான் செல்வேன்.