AR Rahman: இசை புயல் இயக்கிய முதல் படம்... சர்வதேச சினிமாவில் புதிய மைல்கல் பதித்த ஏ.ஆர்.ரஹ்மான்!
AR Rahman : நேற்றைய தினம் உலகம் முழுவதும் இந்த இசை ஆல்பத்தை Believe Music வெளியிட்டது.
கோடிக்கணக்கான ரசிகர்களின் பிரியமான இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் "Le Musk" படத்தின் புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 12 வேறுப்பட்ட இசைத் தொகுப்புகளுடன், உலகளாவிய அளவில் நேற்று வெளியிடப்பட்ட இந்த ஆத்மார்த்தமான இசை ஆல்பம், ரஹ்மானின் பிரபலமான படைப்புகளை போன்று, எல்லைகளை தாண்டி, கேட்பவர்களை இசையால் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் தானே இயக்கியுள்ள "Le Musk" திரைப்படம், இசை, காட்சி ,கதை அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு புதிய வகை சினிமா அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜாஸ், ஆர்க்கெஸ்ட்ரா உள்ளிட்ட பலவிதமான மியூசிக் ஸ்டைல் கொண்டு உருவாகிய இந்த ஆல்பம் ரஹ்மானின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.
உன்னத இசை அனுபவம்
இந்த இசை ஆல்பம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது, “இசை "Le Musk" படத்தின் இதயமாகும். அது படத்தின் உயிரை ஏந்திக்கொண்டு, ரசிகர்களை உணர்ச்சிபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் ஒன்றவைக்கும். இத்திரைப்படம் உழைப்புடன் அன்புடனும் உருவானது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு உணர்ச்சிகரமான அனுபவத்தை உருவாக்க முயன்றோம். உலகத்துடன் இந்த இசை ஆல்பத்தை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.”
நோறா அர்னேஜெடர், சனா மூஸா, லின்டா லிண்ட், மெய்சா காரா, ஹிரால் விராடியா, சிமோனா கில்பர்ட், ஃபிர்டாஸ் ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் புடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ரா உள்ளிட்ட முக்கியமான பல்வேறு ஆளுமைகளின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட இவ்விசை ஆல்பத்தில் விருது பெற்ற இசை பொறியாளர் கிரெக் பென்னியும் பணிபுரிந்துள்ளார்.
உலகளாவிய தாக்கம்
Believe Music உடன் இணைந்து இந்த உலகலாவிய வெளியீட்டினால் , AR ரஹ்மான் தனது புதுமையான படைப்புகளை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ளார். AR ரஹ்மான் இயக்குனராக அறிமுகமாகும் இப்படம், உலக சினிமாவில் புதிய மைல் கல்லாக அமையும். மேலும், ரஹ்மான், “Le Musk போன்ற அனுபவம் தரும் படங்களை உலகம் முழுவதும் வெளியிடுவதற்காக பிரத்தியேகமான ஸ்டுடியோக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். நாங்கள் செய்த தொழில்நுட்ப முயற்சிகளின் வாயிலாக மட்டுமே இந்த படம் சாத்தியமானது. என் குழு முந்தைய எல்லைகளைத் தாண்டி எடுத்த முயற்சிகளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
இப்போது அனைத்து முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களிலும் Le Musk இசை ஆல்பத்தை கேட்டு ரசிக்கலாம்