Actor Vikram: நடிக்க கூப்பிட்ட அனுராக் காஷ்யப்... பதிலே சொல்லாத விக்ரம்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!
தன்னுடைய கென்னடி படத்தின் கதையை நடிகர் விக்ரமை மனதில் வைத்து தான் எழுதியாக நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கென்னடி படத்தின் கதையை நடிகர் விக்ரமை மனதில் வைத்து தான் எழுதியாக நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் நடிக்கும் இந்த திரைப்பட திருவிழா கடந்த மே 16 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் இந்தியா சார்பில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து ஆவணப்படங்கள், திரைப்படங்கள் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து 3 படங்கள் இடம் பெற்றுள்ளது.
மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் ‘கென்னடி’ படமும், ஃபோர்ட்நைட் பிரிவில் ‘ஆக்ரா’ படமும், பிரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவில் ‘இஷானோ’ படமும் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியில் உருவாகியுள்ள ராகுல் பட், சன்னி லியோன், மேகா பர்மன், அபிலாஷ் தப்லியாள், மோஹித் தல்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “கென்னடி”. இந்த படத்தை அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். கென்னடி படம் மே மாதம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த படம் தொடர்பாக அனுராக் காஷ்யப் தெரிவிக்கும் போது, “ கென்னடி என படத்திற்கு பெயர் காரணமே நடிகர் விக்ரம் தான். அவரின் உண்மையான பெயரும் அது தான். விக்ரமை மனதில் வைத்து தான் இதற்கு கதை எழுதினேன். நான் அவரைத் தொடர்பு கொண்டு படத்தில் நடிப்பது பற்றி கேட்டேன். ஆனால் விக்ரம் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. பின்னர் தான் நான் ராகுல் பட்டிடம் கதை சொன்னேன். அவர் எட்டு மாதங்களை கென்னடி படத்திற்காக செலவழித்தார்” என கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த அனுராக் காஷ்யப்
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராக் காஷ்யப், சினிமா ஆசையில் 1993 ஆம் ஆண்டு மும்பைக்கு வந்தார். அங்குள்ள தியேட்டர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதி வந்தார். தொடர்ந்து ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அவர் பாஞ்ச் என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் சென்சாரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அப்படம் ரிலீசாகவில்லை.தொடர்ந்து Black Friday, No Smoking, Return of Hanuman, Dev.D, Gangs of Wasseypur, Bombay Velvet உள்ளிட்ட பல படங்களை இயக்கி பாலிவுட்டில் முக்கிய இயக்குநராக வலம் வருகிறார். நடிகராகவும் தன் திறமையை காட்டிய அனுராக் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவின் படங்களை மனம் விட்டும் பாராட்டும் அனுராக் காஷ்யப் ரசிகர்களுக்கும் நன்கு பரீட்சையமானவராக மாறினார் . அதேசமயம் விக்ரம் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.