Annatha First Look : கொத்து கொத்தாய் மணிகளுக்கு நடுவே கெத்து காட்டும் ‛அண்ணாத்த’...! பர்ஸ்ட் லுக் வந்தாச்சு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை சற்று முன் வெளியாகியுள்ளது.
#AnnaattheFirstLook @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#AnnaattheDeepavali pic.twitter.com/pkXGE022di
— Sun Pictures (@sunpictures) September 10, 2021
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்தும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும், படத்தின் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் தனக்கே உரிய ஸ்டைலில் மேலே பார்த்து நிற்பது போல உள்ளது. பின்னால் திருவிழா நடப்பது போல உள்ளது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. அண்ணாத்த படம் நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அண்ணாத்த படத்தின் இரண்டு போஸ்டர்களையும் வெளியிட்டு இருந்தது. ஒரு போஸ்டரில் கிராமப்புறங்களில் உள்ள குல தெய்வ ஆலயத்தில் ரஜினிகாந்த் நிற்பது போலவும், அவரது முன்னே நியூயார்க் நகரம் இருப்பது போலவும் இருந்தது.
மற்றொரு போஸ்டரில் அரிவாள் ஒன்று வாகனத்தின் முன்பு இருப்பது போலவும் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.