மேலும் அறிய
Advertisement
‛இனி அது தேவையில்லை... அதான் இடிக்கச் சொன்னேன்’ -அரசு சிலை தகர்த்த காரணத்தை போட்டு உடைத்த அன்னபூரணி!
என் உடலுக்கு நன்றி உணர்வாக இந்த ஆடையை நான் உடுத்துகிறேன். அதுக்கு நான் என்ன செய்ய முடியும். நான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கார் வைத்திருக்கிறேன். தங்க வீடு வைத்திருக்கிறேன்.
அரசு சிலையை உடைத்தது தான், அன்னபூரணி அரசு அம்மா மீதான கடுமையான விமர்சனத்திற்கு முக்கிய காரணமானது. அவர் இறந்த பிறகு, அன்னபூரணி வேறு திருமணம் செய்ததாகவும், அந்த கணவர் தான் அரசு சிலையை உடைத்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அது குறித்து அன்னபூரணி அரசு அம்மா, இணையதளத்திற்கு நேரலையில் பேட்டியளித்த போது விளக்கள் அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி...
‛‛2 மாதத்திற்கு ஒரு முறை ஓட்டலில் தான் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறேன். தொண்டாமுத்தூரில் எங்களுக்கான இடம் இருந்தும், அது புறநகரில் இருப்பதால், செங்கல்பட்டில் புதிதாக துவங்கலாம் என முடிவு செய்தேன். அந்த இடத்தை விற்க நினைத்தேன். சிலை இருப்பதால் அந்த இடத்தை வாங்க பலரும் முன்வரவில்லை. இனி அங்கு நாம் செல்லப்போவதில்லையே என்பதால், இனி அந்த சிலை தேவையில்லை என்பதால், நான் தான் அந்த சிலையை அகற்றக் கூறினேன். அந்த இடத்தை விற்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது.
நானும் அரசும் தனித்தனி உடலாக இருக்கும் போது, அவ்வளவு அந்யோன்யமாக வாழந்தோம். அக்கம் பக்கத்தில் கேட்டுப்பாருங்கள். என்னோட மகளுக்கு கூட நான் தனி நேரம் ஒதுக்க முடியாது. என்னைத் தேடி வரும் குழந்தைகளுக்கு தான் நான் நேரம் ஒதுக்க முடியும். எனக்கு சுயநலம் இல்லை. சுயநலம் இருந்தால் ஆன்மிகத்தில் இருக்க முடியாது.
ஸ்டீபன் மூன்றாவது கணவர் என்கிறார்கள்; அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அந்த பெயரே எனக்கு தெரியாது. நான் அவதாரம், நான் ஆதிபராசக்தி, நான் கடவுள் என நான் எங்கும் சொல்லவில்லை. ஆன்மிகம் என்றால் என்ன என்பதை உணர வைக்க தான், நான் வந்தேன்.
ஆதிபராசக்தி என்கிற பெயரால் தான் இவ்வளவு பிரச்சனை. அதனால், இனி அந்த பெயர் எனக்கு தேவையில்லை. என்னை குழந்தைகளின்(பக்தர்கள்) அனுபவத்தை எல்லாம், ட்ரோல் செய்கிறார்கள். என் குழந்தைகள் என்னிடம், எப்போதும் போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். போன் செய்து தான் என்னிடம் அவர்கள் பேச வேண்டும் என்பதில்லை; உணர்வுபூர்வமாக அவர்களுடன் நான் தொடர்பில் உள்ளேன். என்னை உணராத வரை என்னை தவறாக தான் பேச முடியும்.
அறிவு சார்ந்தவர்களுக்கு என்னால் புரியவைக்கவோ, உணர வைக்கவோ முடியாது. ஆன்மிகத்தை புரிந்தவர்கள், என்னை புரிந்து கொள்வார்கள். எனக்காக வேறு யாராவது ஆதரவு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் மீது அவதூறு பரப்புவார்கள். அவர்களை கொச்சைபடுத்துவதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. எனவே நானே அனைத்துக்கும் பதில் தருகிறேன். எனக்கு ஆதரவாக யாரும் பேச வேண்டாம்.
என் உடலுக்கு நன்றி உணர்வாக இந்த ஆடையை நான் உடுத்துகிறேன். அதுக்கு நான் என்ன செய்ய முடியும். நான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கார் வைத்திருக்கிறேன். தங்க வீடு வைத்திருக்கிறேன். இதெல்லாம் ஆடம்பரமா? நான் ஏதோ கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க இங்கு வரவில்லை. என்னுடைய வேலையை செய்ய தான் இங்கு வந்துள்ளேன். என்னைப்பற்றிய தவறான வீடியோக்களை அழித்துவிடுங்கள்!’’ என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
நிதி மேலாண்மை
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion