மேலும் அறிய
‛இவ்வுலகை காப்பவளுக்கு இன்சூரன்ஸா?’ எக்ஸ்ப்ரி ஆன காரில் லக்ஸரி பயணம் செய்து வரும் அன்னபூரணி அம்மா!
2020 செப்டம்பர் 4ம் தேதியோடு அந்த இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.
அன்னபூரணி அரசு அம்மாவின் பக்தி சொற்பொழிவை விட, அவர் தொடர்பான தகவல்கள் தான் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தன்னை சாமியராக, அல்லது தானே கடவுளாக, அவதாரமாக, ரட்சகராக சொல்லிக்கொள்ளும் பலர், பெரும்பாலும் ஆடம்பரத்தை பொதுவெளியில் வைப்பதில்லை. ஆனால், நமது அன்னபூரணி அரசு அம்மா... கொஞ்சம் ஹைடெக் ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. அம்மாவின் ஸ்பெஷல் என்னவென்றால், அவர் வருவதே ஹோண்டா டபிள்யூ ஆர் வி காரில் தான்.
சிவப்பு நிற காரில், சிந்தாமல் சிதறாமல் அவதாரமாய் வந்திறங்கும் அம்மாவை, கதவை திறந்து, கவலை மறந்து, ஆசை துறந்து அழைத்துச் செல்லும் அன்பர் கூட்டம். இப்படி தான் இருந்தது, அன்னபூரணி அம்மாவின் அன்றாட ஆன்மிக பயணம். யார் கண் பட்டதோ... பக்தர்களை பாத கமலத்தில் சரணடைய அழைத்த அம்மா, இப்போது சரணடைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் பழைய கதையும், புதிய கதையும் அனைவரும் அறிந்த ஒன்றாகிவிட்டது. இப்போது, அதில் வேறு என்ன புது அப்டேட் என, வலிமை அப்டேட்டை விட அதிக எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருப்பது அன்னபூரணி அரசு அம்மாவின் விவகாரத்தில் தான். அப்படிப்பட்ட அப்டேட் தான் இது!
அன்னபூரணி அரசு அம்மாவின் எண்ட்ரி பாய்ண்டிற்கே இப்போது பங்கம் வந்திருக்கிறது. அவர் பயன்படுத்தும் காருக்கு இன்சூரன்ஸ் முடிந்து,1 ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் புதுப்பிக்கவில்லை. உலகை காப்பவளுக்கு , காப்பீடு எதற்கு என அவர் நினைத்திருக்கலாம். அந்த சக்தியை உணரும் தன்மை நமக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், ஹோண்டா காருக்கு இருந்திருக்கிறது. சரி... அவர் கார் பற்றி பார்ப்போம். அன்னபூரணி பழனியப்பன் என்கிற பெயரில், 2019ல் அவர் அந்த காரை வாங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 2019 செப்டம்பர் 6 ம் தேதி, அந்த காருக்கான வாகன பதிவு நடந்துள்ளது.
HDFC ERCO GENETRAL INSURANCE CO LTD நிறுவனத்தில் அவர் காருக்கான காப்பீடு எனப்படும் இன்சூரன்ஸ் பதிவு செய்துள்ளார், 2020 செப்டம்பர் 4ம் தேதியோடு அந்த இன்சூரன்ஸ் காலாவதியாகிவிட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன. அதன் பின் அன்னபூரணி தனது காருக்கான இன்சூரன்ஸ் புதுப்பிப்பை மேற்கொள்ளவில்லை என்கிறது, ஆன்லைன் ஆவணம். அதுமட்டுமல்லாமல், குன்றத்தூரில் தான் அவர் வசித்து வந்துள்ளார். அங்கிருந்து தான், தனது காரில் பக்தகோடிகளை சந்தித்து வந்துள்ளார். கலர் கலர் புடவைகள், கொத்து கொத்தாய் நகைகள், தலை முதல் பாதம் வரை மலர்கள் என காஸ்ட்லி கடவுளாய் வலம் வந்த அன்னபூரணி அம்மா... காப்பீடு செய்ய மறந்தது, கடவுளுக்கே அடுக்குமா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
ஆட்டோ
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion