மேலும் அறிய
Advertisement
Anabelle Sethupathi | வேற லெவல் போஸ்டர் லுக்கில் விஜய் சேதுபதி, டாப்ஸி.. அனபெல் சேதுபதியின் கெத்து ரோல்ஸ் என்ன தெரியுமா?
விஜய் சேதுபதி, டாப்சி இணைந்து நடித்துள்ள அனபெல் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. திரைப்படங்களுக்கு முன்பு பல குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர் நடித்துள்ளார். ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார்.
நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் தற்போது விஜய், ரஜினி உள்ளிட்டோர் திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். வருடத்திற்கு இவர் நடிப்பில் 5 முதல் 6 திரைப்படங்கள் வரை வெளியாகி ஹிட் அடிக்கின்றன. அந்த வரிசையில் தற்போது ஹிட்டாக காத்திருக்கும் திரைப்படத்திற்கு அனபெல் சேதுபதி என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
அறிமுக இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இந்த படத்தை இயக்கி உள்ளார். பேஷன் ஸ்டுடியோ நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகி உள்ள இதில் ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரண்டு வேடங்களில் நடித்து உள்ளனர்
ஜெய்ப்பூர், சென்னையில் படமாகும் இந்த படம் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. ராதிகா, யோகிபாபு, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர், தேவதர்ஷினி, சேத்தன், சுரேகா வாணி, மதுமிதா, சுப்பு பஞ்சு, சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப்பின் எடிட்டிங் பணி செய்ய, பாளரா கிஷோரை படத்திற்கு இசையமத்துள்ளார்.
Here it is #AnnabelleSethupathi First look.
— VijaySethupathi (@VijaySethuOffl) August 26, 2021
Streaming from Sep 17th on @DisneyplusHSVIP @taapsee @IamJagguBhai #RajendraPrasad @realradikaa @iYogiBabu @vennelakishore @SDeepakDir @Sudhans2017 @jayaram_gj @PassionStudios_ @goutham_george @PradeepERagav @tuneyjohn @sureshnmenon pic.twitter.com/t8LYeS62DV
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியீட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி, டாப்ஸி இருவரும் ராஜா, ராணி தோற்றத்தில் உள்ளனர். மேலும் அடுத்த மாதம் 17-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். போஸ்டரை பார்த்தவர்கள் தற்போதே படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறினர். முதல் பாகத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு பொறுத்து, 2-ஆம் பாகம் எடுக்கப்படும் என படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion