மேலும் அறிய

Annaatthe First Single | S.P.B இறுதியாக ரஜினிக்கு பாடிய பாடல் ! - நாளை மறுநாள் வெளியிடுகிறது படக்குழு!

படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.  படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் படம் மீதான எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமானது.இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. நடிகர் ரஜினிகாந்தும் டப்பிங் பேசி முடித்துவிட்டார். இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை  விநாயகர் சதுர்த்தி தினமான இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும், படத்தின் மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி வெளியிடப்பட்ட படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

 

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் பாடல் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.  இந்த பாடலை மறைந்த பாடலர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியுள்ளார். இது அவரில் குரலில் வெளியான இறுதி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலுக்கான வரிகளை விவேகா எழுதியுள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படம் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் , குஷ்பு , மீனா , பிரகாஷ்ராஜ் , ஜகபதி பாபு என மாபெறும் நட்சத்திர பட்டாளங்களில் கூட்டணியில் உருவாகியுள்ளது. படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்தபடத்தை யாரோ ஒரு இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரஜினி அடுத்தடுத்து  இரண்டு படங்களில்  நடிக்கப்போவதாக அவருக்கு நெருக்கமானவர்களிடம்  பகிர்ந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் அடுத்த படம் அவரது 169-வது படம் . 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங் பெரியசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் தங்கள் கதைகளை ரஜினிகாந்திடம் விவரித்ததாக கூறப்படுகிறது, ஆனால் ரஜினிகாந்த்  இன்னும் 'தலைவர் 169' படத்திற்கான இயக்குநரை  தேர்வு செய்யவில்லை.இந்நிலையில் இயக்குநர் தேசிங் பெரியசாமி தான் இயக்கப்போவதில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் இதற்கு முன்பு பவர் பாண்டி படத்தை இயக்கினார் என்பது நாம் அறிந்ததே. அடுத்து ரஜினியை இயக்கப்போவது யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
Weekend Spl. Bus: வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
EPS Campaign : ’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் - கூடுதல் கட்சிகளை இணைக்க ஆலோசனை
EPS Vs Mutharasan: “உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
“உங்க அப்பாவே வந்தாலும் தோற்கடிக்க முடியாது“ - முத்தரசனுக்கு EPS பதிலடி
Weekend Spl. Bus: வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
வாரக் கடைசில ஊருக்கு போறீங்களா.? சிறப்புப் பேருந்துகளை அறிவித்த அரசு - முழு விவரம்
EPS Campaign : ’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!
Pitbull Dog Bite: சென்னையில் அதிர்ச்சி - பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் பலி; வளர்த்துவந்த பெண்ணையும் கடித்தது
சென்னையில் அதிர்ச்சி - பிட்புல் நாய் கடித்துக் குதறியதில் ஒருவர் பலி; வளர்த்துவந்த பெண்ணையும் கடித்தது
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Sudarshan Reddy: இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: யார் இவர்? எதிர்பார்ப்பை எகிற வைத்த அறிவிப்பு!
Pattabiram Metro: அப்பாடா.! கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராமிற்கு இனி NO Traffic - மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கிய அரசு
அப்பாடா.! கோயம்பேட்டிலிருந்து பட்டாபிராமிற்கு இனி NO Traffic - மெட்ரோவுக்கு நிதி ஒதுக்கிய அரசு
Mahindra Vision T vs Thar Roxx: மஹிந்திரா விஷன் T-க்கும் - Thar ராக்ஸுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
மஹிந்திரா விஷன் T-க்கும் - Thar ராக்ஸுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Embed widget