Annaatthe 3rd single: இந்தப்பக்கம் மீனா.. அந்தப்பக்கம் குஷ்பு.. அண்ணாத்த படத்தின் பாடல் அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ள மருதாணி பாடல் நாளை வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்த்திரையுலகின் சூப்பர் ஸ்டாராக 40 ஆண்டுகள் வலம் வருபவர் ரஜினிகாந்த். தர்பார் படத்திற்கு பிறகு, இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. பின்னர், தீபாவளி விருந்தாக அண்ணாத்த திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்று நாளை மாலை வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மருதாணி என்று தொடங்கும் இந்த பாடலுக்காக ஒரு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
#Marudhaani: #AnnaattheThirdSingle is releasing Tomorrow @ 6 PM!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @AzizNakash @anthonydaasan @vandanism #ManiAmuthavan @khushsundar #Meena @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/0GoiGNtC4B
— Sun Pictures (@sunpictures) October 17, 2021
இந்த போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்தும், நடிகை குஷ்பு, நடிகை மீனாவும் நடனமாடுவது போல உள்ளது. வீட்டில் நடைபெறும் விசேஷ நிகழ்வு ஒன்று போல இந்த காட்சி உள்ளது. குடும்பப்பின்னணியில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
அண்ணாத்த படத்திற்கான போஸ்டர்களை அடுத்தடுத்து வெளியிட்ட படக்குழு, கடந்த ஆயுதபூஜை தினத்தன்று அண்ணாத்த படத்தின் டீசரை வெளியிட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்தின் ஆக்ஷன் காட்சிகளும், பஞ்ச் வசனங்களும் நிறைந்திருந்தன. ஆனால், படத்தின் பிற நடிகர்கள் யாருமே அதில் காட்டப்படவில்லை.
இதுமட்டுமின்றி, அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி. பாடிய ரஜினிகாந்தின் தொடக்கப் பாடலான “அண்ணாத்தா” என்ற பாடலையும், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா காதல் பாடலான “சாரல், சாரல் காற்றே” பாடலையும் படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. இந்த இரு பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
லிங்கா படத்திற்கு பிறகு கபாலி, காலா, பேட்ட, தர்பார் என்று தனது வயதிற்கேற்ப பாணியை மாற்றிய நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலத்திற்கு பிறகு, தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் முழு ஆக்ஷன் மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படத்தில் நடித்துள்ளார். இளமையான தோற்றத்தில் இந்த படம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவரது தோற்றங்களும், ஸ்டில்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்