Anitha Sampath: உன் கைகளைப் பிடிச்சுக்கிட்டே இறந்துவிட ஆசை.. பிக்பாஸ் அனிதா சம்பத் எமோஷ்னல் போஸ்ட்
பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து பின்னர் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை அனிதா சம்பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்து பின்னர் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை அனிதா சம்பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை அனிதா சம்பத். அதனைத்தொடர்ந்து அவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றார். இதனையடுத்து அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். ஆனால் அதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பின்னர் பாதியிலேயே வெளியேறினார்.
View this post on Instagram
அந்த நிகழ்ச்சியில் வெளியே வந்த அவர் தான் வாங்கிய புது வீட்டில் கிரஹபிரவேசம் நடத்தினார். இந்த நிலையில் கல்யாண நாளில் கணவரான பிரபாகரனுடன் இருக்க முடியாததை நினைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அதில், “முக்கியமான நாள்ல ஒன்னா இருக்க முடியாம வேற நாட்டுல உட்கார்ந்து இத எழுதுவேன்னு நெனச்சே பாக்கல..எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து, சந்திச்சு, காதலிச்சு, கரம் பிடிச்சு வாழுற எத்தனையோ பேருல, வேகு சில பேரோட அன்பு கதைகள்ல நம்மளுதும் ஒன்னு. வாழ்க்கை எப்படி புரட்டிப்போட்டாலும், வாழ்க்கை எத்தனை முறை கீழே தள்ளி விட்டாலும், வாழ்க்கை மனச சுக்குநூறா ஒடச்சி போட்டாலும், நாம இல்லாமயே போயிட்டா இவ்ளோ பிரச்னை இல்லயேனு வாழ்க்கையோட விளிம்புல நின்னு மோசமா என்னை யோசிக்க வச்சாலும்,
கன்னுக்குட்டி.... அடச்சீ... என்னடா..இதுக்கெல்லாம் இவ்ளோ அழுதுக்குட்டு..னு மொத்தமா அனச்சி கதகதப்போட சேர்த்து நான் வாழ நீ கொடுக்கும் நம்பிக்கை...அடுத்த நாள் வாழ்க்கை மாறிடும்ங்குற நம்பிக்கைய முத்தத்தால கொடுக்கும் உன் அன்பு, கண்ணீர துடைக்க எப்பவும் தயாரா இருக்க உன் கைகள், இதெல்லாம் எனக்கு கெடச்ச வரம்...
2016ல zeroல இருந்த எனக்கு ஹாஸ்டல் fees கட்டி, ஹாஸ்டல்ல சமைக்க கரண்ட் அடுப்பு, பாத்திரம்னு வாங்கி கொடுத்து கஷ்டப்பட்ட, அனிதாக்கூட நின்ன காதலன் பிரபா தொடங்கி, கொஞ்ச கொஞ்சமா வளர்ந்து, புது வீடு வாங்கி கணவனா தொடருர பிரபா வரைக்கும் காதல்ல, அன்புல, நம்பிக்கையில ஒரு துளி மாற்றமும் இல்ல.. நெற்றியில் உன் முத்தத்தின் எச்சில் குளிரோடு அன்பைச்சொல்லும் உன் கண்களை பார்த்துக்கொண்டே கண்ணீர் துடைக்கும் உன் கரங்களை பிடித்துக்கொண்டே இறந்துவிட ஆசை… Love u pappu
கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்💖 எப்பவும் சொல்றமாதிரி. உன்ன பார்க்கமலே போயிருந்தா நான் என்ன ஆகிருப்பேன் பப்பு" என்று பதிவிட்டு இருக்கிறார்.