Aniruth Arabic Kuthu Dance: விஜய்க்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே.. இது அனிருத் அரபிக்குத்து.. வைரலாகும் வீடியோ..!
அரபிக்குத்து பாடலுக்கு விஜய் ஆடுவது போலவே ஆடி அனிருத் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தின் போஸ்டர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அண்மையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து லிரிக்கல் பாடல் வெளியானது.
வெளியான 10 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்த இந்தப்பாடல் தற்போது வரை 42 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. இந்தப்பாடலில் வருவது போலவே, பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இடையே பூஜா ஹெக்டேவும் இந்தப்பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் எகிடுதகிடு கிட்டடித்தது.
View this post on Instagram
இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத்தும் இந்தப்பாடலுக்கு விஜய் ஆடுவது போலவே நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப்பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram