'சின்ன வயசுல அனி பாட மாட்டான்.. எனக்கு பிஜிஎம் கொடுக்கல' - அனிருத் குறித்து மனம் திறந்த தந்தை ரவி
ஆனாலும் அனிருத் எனக்கும் ஒரு பி.ஜி.எம் கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை .வீட்டுக்கு வரட்டும் என தனது மகனை சிரித்துக்கொண்டே நக்கலடித்தார் ரவி ராகவேந்திரா.
அனிருத் :
தென்னிந்திய சினிமாவின் ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத். இளம் வயதிலேயே அனிருத் அடைந்த இலக்கு அபாரமானது. முதன் முதலாக 3 திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் , அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவரின் ஆரம்ப கால வணக்கம் சென்னை ஆல்பம் பாடல் இன்றளவும் பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் கூட உலகநாயகனின் விக்ரம் திரைப்படத்திற்கு அனிருத் கொடுத்த இசை படத்தின் வெற்றிக்கு கூடுதல் பக்க பலமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
View this post on Instagram
அனிருத் தந்தை :
அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்திராவை பலருக்கும் தெரிந்திருக்கும். 1990 களில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக சின்னத்திரையில் முக்கியமான நடிகர். இவர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா அவர்களின் சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி ராகவேந்திரா தனது மகனின் வெற்றி குறித்து பெருமை படாத நாளே இல்லை என கூறலாம். அவரின் எந்தவொரு பேட்டி அல்லது நேர்காணலை எடுத்துக்கொண்டாலும் அனிருத்தின் இசை திறமையை கண்டு வியப்பதாகத்தான் கூறுகிறார்.
மகனை பற்றி ரவி ராகவேந்திரா :
அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை நினைவிருக்கலாம். அந்த படத்தில் அனிருத்தின் தந்தை பக்கத்து வீட்டுக்காரராக வலம் வருவார். விக்கி தனக்கு ஒரு சிறிய கதாபாத்திரம் மற்றும் அதற்கு ஒரு எண்ட்ரி கொடுத்தார். ஆனாலும் அனிருத் எனக்கும் ஒரு பி.ஜி.எம் கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை .வீட்டுக்கு வரட்டும் என தனது மகனை சிரித்துக்கொண்டே நக்கலடித்தார் ரவி ராகவேந்திரா. ரவி ராகவேந்திராவிற்கு இசையைப்பாளர்கள் எப்படி இசையமைக்கிறார்கள் என்பதே தெரியாதாம். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் இந்த கேள்வியை ஒரு முறை கேட்டிருக்கிறார் ரவி ராகவேந்திரா. இப்படியான கேள்வி கேட்டவரின் மகன்தான் இன்று கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்றால் அவருக்கு எவ்வளவும் பெருமையாக இருக்கும் . சிறு வயது முதலே அனிருத்திற்கு இசை மீது ஆர்வம் இருந்தாலும் அவர் பாடல்கள் பாடுவதில் நாட்டம் செலுத்தமாட்டாராம். தற்போது திரைப்படங்களில் அனிருத் பாடுவது soulful ஆக இருக்கிறது என்கிறார் ரவி . இசை குறித்த மற்றும் அனிருத் ஒப்பந்தமாகும் படத்தேர்வுகள் குறித்த எந்தவொரு விஷயத்திலும் தான் தலையிட மாட்டேன் என்றும் அது முழுக்க முழுக்க அனிருத்தின் சாய்ஸ்தான் எனவும் மகன் குறித்து பெருமிதம் கொள்கிறார் ரவி ராகவேந்திரா.