Vettaiyan First Single: மனசிலாயோ... ஹண்டர் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்... அனிருத் கொடுத்த ஹாட் அப்டேட்
Vettaiyan First Single: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான மனசிலாயோ... பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்ற அப்டேட் கொடுத்துள்ளார் அனிருத்.
![Vettaiyan First Single: மனசிலாயோ... ஹண்டர் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்... அனிருத் கொடுத்த ஹாட் அப்டேட் Anirudh has given latest update on Vettaiyan First single named Manasilayo will release soon Vettaiyan First Single: மனசிலாயோ... ஹண்டர் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில்... அனிருத் கொடுத்த ஹாட் அப்டேட்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/b5c5da164a9ba3b48424dea9e2fe83fa1724147042744572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் அழுத்தமான திரைக்கதை கொண்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் த.செ. ஞானவேல். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'வேட்டையன்'.
ஃபகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 10ம் 'வேட்டையன்' படம் வெளியாக உள்ளதால் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது வரையில் படம் குறித்த வேறு எந்த அப்டேட்டும் இதுவரையில் வெளியாகவில்லை. அந்த வகையில் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 'வேட்டையன்' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'ஜெயிலர்' படத்தில் ரஜினியின் 'மனசிலாயோ' என்ற வசனம் ட்ரெண்டிங்கானது. அதை வைத்தே வேட்டையன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடல் விரைவில் வெளியாகும் என தெரிவித்து இருந்தார். இப்பாடல் வரிகளை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார். இவர் 'தலைவர் நிரந்தரம்..' என்ற பாடல் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் வெளியானதில் இருந்து 'வேட்டையன்' வேட்டைக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
#Manasilayo #Vettaiyan song comin soon 🥁👑🙏🏻#HunterVantaar
— Anirudh Ravichander (@anirudhofficial) August 20, 2024
'வேட்டையன்' படம் வெளியாகும் அதே நாளில் தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'கங்குவா' படமும் வெளியாகவுள்ளது. இதனால் இரு படங்களில் ஏதாவது ஒரு படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 'வேட்டையன்' படக்குழு அதன் ரிலீஸ் தேதி அக்டோபர் 10 தான் என்பதை உறுதி செய்துவிட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)