சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு... இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!
வயது வாரியாக நடிகர்கள் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மேக் அப் இல்லாத தங்களின் 3 போட்டோக்கள் மற்றும் 2 நிமிட அறிமுக வீடியோவை அனுப்பி, விண்ணப்பிக்கலாம்.
சினிமா பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் எண்ணம், நாமும் நடிக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில் சினிமாவில் நடிக்க பலபேர் ஊரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து ,கடுமையாக போராடி வென்றவர்களும் உண்டு. கடும் போராட்டத்திற்குப் பின் தோல்வியடைந்தவர்களும் உண்டு.
View this post on Instagram
சினிமா அனைவருக்கும் வாய்ப்பு தருவதில்லை. வரும் வாய்ப்பை கட்டியாக அணைத்துக் கொள்பவர்களை தான், சினிமா தக்க வைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் தான் என் திறமையை நிரூபிக்க முடியும் என நினைப்பவராக நீங்கள். அப்படி ஒரு வாய்ப்பு உங்களை தேடி வந்துள்ளது. ஆம், பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கும் படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அதற்கான அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன். அதில்
‛நான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறேன்.
நம்பிக்கையுடன் நீங்கள் இவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.’
என்று அந்த பதிவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எந்த மாதிரியான நடிகர்கள் வேண்டும் என்கிற பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன் படி
45-55 வயது கொண்ட ஆண்கள்
30-45 வயது கொண்ட பெண்கள்
50-60 வயது கொண்ட பெண்கள்
12-14 வயது கொண்ட சிறுவர்கள்
12-14 வயது கொண்ட சிறுமிகள்
16-18 வயது கொண்ட இளைஞர்கள்
என வயது வாரியாக நடிகர்கள் தேர்வு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மேக் அப் இல்லாத தங்களின் 3 போட்டோக்கள் மற்றும் 2 நிமிட அறிமுக வீடியோவை அனுப்பி, விண்ணப்பிக்கலாம்.
familycirclemovies@gmail.com என்கிற இமெயில் மூலம் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
சினிமாயில் வாய்ப்பு தருவதாக கூறி பலர், பணம் மோசடி செய்தும், பெண்களின் வாழ்க்கையில் விளையாடியும் ஏமாற்றி வரும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இந்த விளம்பரத்தை அது போல் எண்ணிவிடாமல், ‛தான் இசையமைக்கும் படம் என்பதால், நம்பகத்தன்மையோடு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்’ என்று ஜேம்ஸ் வசந்தன் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் என்பதை கடந்து, நிகழ்ச்சி தொகுப்பாளராக பல்வேறு சேனல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் ஜேம்ஸ் வசந்தன்.