Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

ரியா சக்கரவர்த்தியின் போதைப்பொருள் குற்றச்சாட்டு குறித்து சுஷாந்த் -சாரா ஆகியோருடன் நடித்த நிதிஷ் பரத்வாஜ் வாய் திறந்துள்ளார். 

2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் நடிகர் என்றாலும் தோனியின் பயோபிக்கில் நடித்ததால் மொழி தாண்டி சுஷாந்த் அறியப்பட்டார். பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்ந்த இளம் நடிகரின் மரணம் பல்வேறு கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 5 நாட்களில் முதல் வருடம் அனுசரிக்கப்படும் நிலையில் பாலிவுட் உலகில் பல்வேறு தரப்பினரும் சுஷாந்த் சிங் குறித்து தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். 

சுஷாந்த் இல்லையென்பதையே மனம் ஏற்கவில்லை என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே சுஷாந்த் மரணம் தொடர்பான விசாரணையில் சிக்கியுள்ள நடிகை ரியா சக்கரவர்த்தி, நடிகர் சைஃப் அலிகானின் மகனான சாரா அலிகானை உள்ளே இழுத்தார். தனக்கு சாரா அலிகான் தான் கஞ்சா, ஒயின் கொடுத்ததாக விசாரணையில் அவர் தெரிவித்தார். தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதாக இருக்கும் சுஷாந்தின் மரண விசாரணையில் ரியாவின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் ரியா சக்கரவர்த்தியின் குற்றச்சாட்டு குறித்து சுஷாந்த் -சாரா ஆகியோருடன் நடித்த நிதிஷ் பரத்வாஜ் வாய் திறந்துள்ளார். Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

இது குறித்து பேசியுள்ள அவர், ’’சுஷாந்த் மிகவும் சுறுசுறுப்பானவர். போதைப்பொருள் பயன்படுத்தினால் அப்படி துறுதுறுவென இருக்க முடியாது. அவர் எப்போதுமே என்னிடம் நட்சத்திரங்கள் குறித்தும், விண்வெளி குறித்துமே பேசுவார். உயர்ந்த எண்ணங்களை கொண்டிருந்த அவர் தற்கொலை செய்துகொள்வார் என நான் நினைக்கவில்லை. சாராவும், சுஷாந்தும் புத்துணர்ச்சியாகவே இருப்பார்கள். அவர்கள் கண்களில் போதைக்கான சுவடே இருக்காது’’ என்றார். நிதிஷ் பரத்வாஜின் இந்த கருத்து ரியாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாகவே உள்ளது.
மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!
மேலும் பேசிய அவர், ’’சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் நான் கடைசியாக பேசிய போதும் அவரது குரலில் எந்த சோகமும் இல்லை. அவர் பிரச்னையில் இருப்பதாக எனக்கு தோன்றவே இல்லை. அவருடைய வீட்டுக்கு வரவேண்டுமென சுஷாந்த் என்னிடம் கேட்டுக்கொண்டார். நானும் வருவதாக சொன்னேன்’’ என்றார்.Rhea Allegations | சாரா தான் கஞ்சா கொடுத்தார் - ரியா குற்றச்சாட்டை மறுக்கும் பாலிவுட் நடிகர்!

சுஷாந்த் சிங், சாரா அலி கான் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நிதிஷ் பரத்வாஜ் நடித்துள்ளார்.  1988ம் ஆண்டு வெளியான மகாபாரதம் தொடரில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றார் நிதிஷ். அதன்பின்னர் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணை தற்போது பாலிவுட்டின் போதை உலகம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. சுஷாந்த் உயிரிழந்து ஒருவருடம் ஆகவுள்ள நிலையில் போலீசாரின் விசாரணையில் மேலும் பல  தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!
 
Tags: Sushant Singh Sushant Singh death Sara Ali Khan actor Nitish

தொடர்புடைய செய்திகள்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

சூப்பரா தம்பி.. சூப்பர்.. இணையத்தை கலக்கும் லோ பட்ஜெட் ஜகமே தந்திரம்!

சூப்பரா தம்பி.. சூப்பர்.. இணையத்தை கலக்கும் லோ பட்ஜெட் ஜகமே தந்திரம்!

பாடல் எழுத வாய்ப்பளிக்கும் வசந்தபாலன் - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

பாடல் எழுத வாய்ப்பளிக்கும் வசந்தபாலன் - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

PSPK 28 | பவர் ஸ்டார் அப்டேட் வெளியிட்ட படக்குழு - அப்செட்டான ரசிகர்கள்.

PSPK 28 | பவர் ஸ்டார் அப்டேட் வெளியிட்ட படக்குழு - அப்செட்டான ரசிகர்கள்.

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : இந்தியாவில் தொற்று பாதிப்பு கொண்ட மாவட்டங்களில் கோயம்பத்தூர் முதலிடம்

Tamil Nadu Coronavirus LIVE News :  இந்தியாவில் தொற்று பாதிப்பு கொண்ட மாவட்டங்களில் கோயம்பத்தூர் முதலிடம்

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

90's கிட்ஸ்களை கிறங்கடித்த மோகினியின் டாப் 5 பாடல்கள்!

90's கிட்ஸ்களை கிறங்கடித்த மோகினியின் டாப் 5 பாடல்கள்!