மேலும் அறிய
Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!
பிசாசு இரண்டாம் பாகத்தில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியை பாலிவுட் நடிகர் கபீர் சிங் விஜய் பாராட்டியுள்ளார்
![Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்! Vijay Sethupathi in Mysskin movie! The villain actor who praises Sethupathi Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/685f6d21a1d77bf2f6fda281ca634f3d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் பயணிப்பவர் மிஷ்கின். இவர் சில படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் , துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு அறிமுக நடிகர்களை வைத்து இயக்கிய பிசாசு படத்தில், பேய்க்கும் காதல் வரும் என்ற கோணத்தில் எடுத்திருந்தது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
![Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/b48850996e1571caf6cde408d3ef7365_original.jpg)
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து அதற்கான கதாநாயகர்களும் தேர்வு செய்யப்பட்டனர். நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 இல் லீட் ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும், இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் இணைந்துள்ளார். விஜய் சேதுபதிக்கு பேய் ஓட்டும் கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிசாசு படத்தின் முதல் பாகத்திலிருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதியும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகரும் , கோலிவுட்டின் மாஸ் வில்லனுமாக அறியப்படும் நடிகர் கபீர் சிங் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவத்தினை பகிர்ந்துள்ளார். அதில் விஜய் சேதிபதியுடன் நடித்தது தனக்கு நடிப்பு பள்ளிக்கூடத்திற்கு சென்றதுபோல் இருந்தது என தெரிவித்துள்ளார். கபீர் சிங் ”றெக்க” படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடித்தவர். இதுதவிர வேதாளம்,ஆக்ஷன், அருவம் போன்ற பல படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion