![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க... அமலா பால் பகிர்ந்த வீடியோ!
Amala Paul: மாற்றத்திற்கு பயப்படாதீர்கள் எனக் கூறி அமலாப்பால் புதிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
![Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க... அமலா பால் பகிர்ந்த வீடியோ! amalapaul release her pregnant look video goes viral Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க... அமலா பால் பகிர்ந்த வீடியோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/fed648eceb261db9803d7fae4d59555a1704975789787571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை அமலா பால் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் அவர் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இருந்த போதிலும் அதே ஆண்டு வெளியான மைனா திரைப்படம் மூலம் தான் அமலாப்பால் பிரபலமானார். இதனையடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால். விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அமலா பால் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகி விட்டது. அதனைத் தொடர்ந்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி சோஷியல் மீடியாவிலும் அமலா பால் ஆக்டிவாக இருந்து வந்தார். விவாகரத்திற்கு பின்னும், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அமலா பால் ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் இணையத்தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, தனது பிறந்தநாளில் அவர் தன் காதலரை அறிமுகப்படுத்தினார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கேரளாவில் மிக எளிமையாக நடைபெற்றது. தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அமலா பால் புகைப்டத்துடன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அமலா பால் “மாற்றத்துக்காக பயப்படாதீர்கள். டார்வின் கூறியபடி, மிகவும் வலுவான புத்திசாலியான இனங்கள் எதுவும் வாழ்வது இல்லை. யார் மாற்றத்துக்கு உட்படுகிறார்களோ, அவர்களே பிழைக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram
இரண்டு தினங்களுக்கு முன் அவர் தன் கணவர் உடன் எடுத்த கர்ப்பகால போட்டோ ஷூட் வீடியோவை பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
மேலும் படிக்க
Udhayanidhi Stalin: துணை முதல்வரா? பொறுப்பு முதல்வரா? - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பாய்ச்சல்
Senthil Balaji: 15வது முறையாக காவல் நீட்டிப்பு! செந்தில் பாலாஜி வழக்கில் நாளை நடக்கப்போவது என்ன?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)