‛நான் பின்நோக்கி செல்ல விரும்பவில்லை...’ மனம் திறந்த நடிகை அமலாவின் பேட்டி!
பல ஆண்டுகள் கழித்து, சினிமாவில் எண்ட்ரியான அமலாவின் பதில் என்ன ?
அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் தயாரிப்பில் ஷர்வானந்த், ரித்து வர்மா, மற்றும் அமலா அக்கினேனி நடித்துள்ள திரைப்படம் "கணம்". இப்படம் செப்டம்பர் 9ஆம் தேதியான இன்று தமிழில் 'கணம்' என்ற தலைப்பிலும் தெலுங்கில்' ஓகே ஒக்க ஜீவித்தம்' என்ற தலைப்பிலும் வெளியானது. படத்தின் ப்ரொமோஷன் நேர்காணல் ஒன்றில் நடிகை அமலா பங்கேற்றார். அதில் சில சுவரஸ்யமான கேள்விகளுக்கு சூப்பராக பதிலளித்தார் 80s குயின்.
பதில் : கணம் எப்படி பட்ட படம் ?
கணம், எதிர்ப்பார்ப்புகளை தாண்டிய ஒரு திரில்லிங்கான கதை அம்சத்தை கொண்ட படம். இந்த படத்தில் பல
காமெடி காட்சிகள் உள்ளது. ஆடியன்ஸ் சிரித்து கொண்டே படத்தை ரசிக்கலாம். ஆனால் படத்தில் ஒரு திரும்பம் வரும். இப்படம், எனக்கு ஒரு வகையான ஊக்கத்தையும் உட்வேகத்தையும் தந்தது. ஷர்வாணந்துடன் எனது நடிப்பு நன்றாக ஒத்துபோனது. நாங்கள் இருவரும் சூப்பர் காம்போ என்றே சொல்லாம். அவர் நல்ல திறமை கொண்டவர். ஒரு ஜெண்டில் மென். இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கும் எங்களை விடவில்லை. ஒன் மோர் ஒன் மோர் என கடுமையாக உழைத்தோம்.
View this post on Instagram
பதில் : கணம் படத்தில் நடப்பது போல், காலத்தை கடந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தால் எங்கு செல்வீர்கள்?
பிற்காலத்திற்கு செல்வீர்களா?
பதில் : இல்லை, நான் முன்னாடி செல்ல வேண்டும். எதிர்காலம் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும்.எதிர்காலத்தில் இருந்து யாராவது, நீ செய்வது சரி தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு இரு என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும், அதுதான் எனக்கு வேண்டும்.
கேள்வி : உங்களிடம் ஏதோ ஒரு பாசிட்டிவிட்டி இருக்கிறது. எப்படி நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?
பதில் : நான் ஒருகாலத்தில் விலங்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன். ஒரு கணத்தில் அதை விட்டு விட்டேன். அப்போது நான் கற்பமாக இருந்தேன். அப்போது யோகா சென்டருக்கு பயிற்சி சென்றேன். யோகா கற்றுக்கொண்டேன். அதில் இருந்து அதை கடைபிடிக்கிறேன். கோவம் வரும், ஆனால் சற்று நேரத்தில் விலகி விடும். யாரையும் துன்புறுத்த தோனாது.