அடுத்தடுத்த அடிக்கும் ஜாக்பாட்... இரட்டை கொண்டாட்டத்தில் அமலா பால்
Amala Paul: அமலா பால் நடிப்பில் அதோ அந்த பறவை போல திரைப்படம் மற்றும் கடாவர் திரைப்படம் இரண்டும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Amala Paul : அமலா பாலின் டபுள் கொண்டாட்டம்... விரைவில் ரிலீஸ்
மைனா புகழ் "அமலா பால்" பல திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். துணிச்சலாக பல படங்களில் நடித்தவர். "ஆடை" படத்தில் அவரின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
கடாவர் திரைப்படம் ஆகஸ்ட் 12 வெளியீடு :
ஆடை படத்திற்கு பிறகு ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்த அமலா பால் தற்போது ஒரு கிரைம் திரில்லர் படத்தில் நடித்துள்ளார். அனூப் எஸ். பனிக்கர் இயக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளது கடாவர் திரைப்படம். தற்போது அதன் ட்ரைலர் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்காக அமலா பால் பல தற்காப்பு பயிற்சிகளை பயின்றுள்ளார். அதனால் டூப் இல்லாமல் சண்டை காட்சிகள் அனைத்தையும் அவரே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
அதோ அந்த பறவை போல திரைப்படம் ஆகஸ்ட் 26 வெளியீடு
சில ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்ட அதோ அந்த பறவை போல படம் பல்வேறு காரணங்களால் வெளியாவது தாமதமாகி கொண்டே போனது. தற்போது அந்த படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் பேனரின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் அருண் ராஜகோபாலன். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மிகவு விறுவிறுப்பாக இருக்கும் இப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும். அமலா பால் நடிக்கும் இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.