Alphonse Puthren: என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல.. மாநாடு குழுவை பாராட்டி உருகிய பிரேமம் டைரக்டர்..!
மாநாடு படம் பார்த்தேன். ஆத்மன் சிலம்பரசன் மன்மதன் படத்தில் நடித்தது போன்று கலக்கியிருக்கிறார். இப்போது இன்னும் அதிகமாக..
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தை இயக்கியதின் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மாநாடு குழுவை பாராட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், “ மாநாடு படம் பார்த்தேன். ஆத்மன் சிலம்பரசன் மன்மதன் படத்தில் நடித்தது போன்று கலக்கியிருக்கிறார். சில இடங்களில் இன்னும் அதிகமாக.. எஸ்.ஜே.சூர்யா சார் அவரது டைரக்ஷனில் நடிப்பது போல நன்றாக நடித்திருக்கிறார்.
திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, எடிட்டிங், சண்டைக்காட்சிகள், செளண்ட் மற்றும் டைரக்ஷன் எல்லாமே மிகவும் சூப்பராக இருந்தது. வெங்கட் பிரபு மற்றும் யுவன் இருவருக்கும் நான் சொல்லிக்கொள்வது நிமிர்ந்து நில் துணிந்து செல்.. ( வாழ்கையில் நான் நம்பிக்கை இழக்கும் தருணங்களிலெல்லாம், இந்தப் பாடல் எனக்கு உத்வேகம் தந்திருக்கிறது. இந்தப் பாடலை கொடுத்தற்காக நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்பது தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்கு காத்திருந்த சிம்புவுக்கு இந்தப் படம் அதனை கொடுத்துள்ளது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் க்ராஃப் ஏற தொடங்கியுள்ள நிலையில், பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சிம்புவின் கால்ஷீட் கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.