Puspa 2 Teaser: ரசிகர்களே! அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 டீசர் எப்போது ரிலீஸ்? இதுதான் தேதி!
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
புஷ்பா
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு உருவாகி பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் நாயகியாக நடித்தார் , மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இப்படத்தில் மொட்டை அடித்து வில்லனாக நடித்து மிரட்டினார். தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான சுகுமாரின் படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்க்ஹ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறரது. புஷ்பா படம் மக்களிடையே பரவலான ஏற்பை பெற்றதற்கு நிறை காரணங்களை சொல்லலாம். பெரும்பாலும் பணக்கார வீட்டு இளைஞர் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். இப்படத்தில் தனது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட புஷ்பராஜ் என்கிற கடத்தல்காரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். நடப்பதில் , தாடியக் ஸ்டைலாக கோதி விடுவதில் இருந்து எல்லா வகையிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
புஷ்பா படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்த மற்றொரு காரணம் தேவி ஸ்ரீபிரசாதின் இசை. இப்படத்தில் இடம்பெற்ற சாமி பாடல் பட்டிதொட்டி எல்லாம் தூள் கிளப்பியது. படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகா மந்தனா திரைக்கு உள்ளெயும் வெளியேயும் ரசிகர்களை கவர்ந்தார்.
கடந்த ஆண்டு மட்டும் இப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜூன் வென்றார். தெலுங்கு சினிமா வரலாற்றிலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் அல்லு அர்ஜூன். அதே நேரத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் வென்றார்.
புஷ்பா 2
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற இப்படத்தின் இரண்டாம் பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகளும் எடுத்து முடிக்கப் பட்டுள்ள நிலையில் வரும் ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
புஷ்பா 2 படத்தை ரசிகர்கள் இவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்து வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளது. முதல் பாகத்தில் அவர் நடிரத்திருந்தாலும் படத்தின் இறுதி காட்சிகளில் தான் அவரது கதாபாத்திரம் வலுபெறும். தற்போது இரண்டாவது பாகத்தில் முழுக்க முழுக்க அவரை வில்லனாக பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்
புஷ்பா 2 டீசர்
தற்போது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வரும் புஷ்பா 2 படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்