Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில் குடியரசு தின கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு பிற்பாதியில் தொடங்கப்பட்டது.
விடாமுயற்சி ரிலீஸ்:
பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படமே முழுவதும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்தாண்டு இறுதியில் அடுத்தடுதது அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விடாமுயற்சி படம் சில காரணங்களால் வெளியாவது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படடது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
23ம் தேதி வெளியீடா?
இந்த நிலையில், விடாமுயற்சி படம் எப்போது ரிலீசாகும் என்று காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு புதிய அப்டேட்டாக படம் குடியரசு தின கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வரும் 23ம் தேதி விடாமுயற்சி படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனவரி 23ம் தேதி வியாழக்கிழமை விடாமுயற்சி படத்தை ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொடர் இழுபறிக்கு பிறகு பல சிக்கல்களுக்கு பிறகு இந்த படம் வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். பொங்கல் தேதி போல இல்லாமல் விடாமுயற்சி படத்தின் அடுத்த ரிலீஸ் தேதி எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் காரணமாக பொங்கல் வெளியீட்டிற்காக அறிவிக்கப்பட்டிருந்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டது.
விடாமுயற்சி படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால், விடாமுயற்சி படத்தை விரைவாக ரிலீஸான சில மாதங்களில், அடுத்த சில மாதங்களில் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.