மூன்று தலைமுறைகளாக சினிமாவில் இருந்துவரும் குடும்பங்கள்

Published by: ABP NADU

1. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய். விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது லைகா தாயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் படத்தை இயக்குகிறார்.

2. நடிகர் வினோத் ராஜின் மகன் விக்ரம். அவரின் மகன் துருவ் விக்ரம் தற்போது படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

3. எடிட்டர் மோகனின் மகன் நடிகர் ஜெயம் ரவி. அவரின் ‘டிக் டிக் டிக்’ படத்தில் மகன் ஆரவ் நடித்துள்ளார்.

4. தந்தை ஆர்.கே.சேகர் போலவே ஏ.ஆர்.ரஹ்மானும் இசை அமைப்பாளராக உள்ளார். அவரின் மகன் ஏ.ஆர்.அமீன் பாடகராக இருக்கிறார்.

5. 60-களின் பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் நடிகர் ஆனந்த் பாபு. அவரின் மகன் நடிகர் கஜேஷ்.

6. திரைப்பட இயக்குனர் எஸ்.சித்தலிங்கையாவின் மகன் நடிகர் முரளி. அவரின் மகன் நடிகர் அதர்வா.

7. நடிகர் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய். அவரின் மகன் ’ஓ மை டாக்’ படத்தில் நடித்துள்ளார்.

8. நடிகர்திலகம் சிவாஜியின் மகன் நடிகர் பிரபு. அவரின் மகன் நடிகர் விக்ரம் பிரபு.

9. நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். அவரின் மகன் கௌதம் கார்த்திக்கும் சினிமாவில் நடிகராக உள்ளார்.